LATEST
24 ரயில்வே தொழிற்சங்கங்கள் 48 மணி நேர போராட்டம்!ரஷ்யா–வட கொரியாவை இணைக்கும் முதல் சாலைப் பாலம் திறப்பு!இலங்கையர்களின் சட்டவிரோத செயல்களால் விசா வசதி இழப்பு – விஜித ஹேரத்!சுமணரத்ன தேரர் தொடர்ந்து விளக்கமறியலில்!38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில்!கொள்கை வகுப்பில் இளைஞர்களுக்கும் இடம் வேண்டும் –MP சாணக்கியன்!பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34% மட்டுமே!வெளிநாட்டு வேலைவாய்ப்பில் “வேலை மாஃபியா” – சஜித் குற்றச்சாட்டு!24 ரயில்வே தொழிற்சங்கங்கள் 48 மணி நேர போராட்டம்!ரஷ்யா–வட கொரியாவை இணைக்கும் முதல் சாலைப் பாலம் திறப்பு!இலங்கையர்களின் சட்டவிரோத செயல்களால் விசா வசதி இழப்பு – விஜித ஹேரத்!சுமணரத்ன தேரர் தொடர்ந்து விளக்கமறியலில்!38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில்!கொள்கை வகுப்பில் இளைஞர்களுக்கும் இடம் வேண்டும் –MP சாணக்கியன்!பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34% மட்டுமே!வெளிநாட்டு வேலைவாய்ப்பில் “வேலை மாஃபியா” – சஜித் குற்றச்சாட்டு!
உள்ளூர்

உரிமம் முதல் தயாரிப்பு திகதி வரை சர்ச்சை – டின் மீன் நிறுவனம் சிக்கியது!

August 8, 2026 · Tamil Ceylon LK

இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் (SLSI) செல்லுபடியாகும் உரிமம் இன்றி பன்னல, எலபடகம பகுதியில் இயங்கி வந்த டின் மீன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று (7) முற்றுகையிட்டது. 

நுகர்வோர் விவகார அதிகாரசபைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அதன் போட்டித் திறன் மேம்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இந்த முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இதன்போது சுமார் 15 லட்சம் ரூபா பெறுமதியான டின் மீன் கையிருப்பு அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. 

இந்த இடத்தில் தயாரிக்கப்படும் டின் மீன்கள் சிறப்பு அங்காடிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தயாரிப்பு திகதியைக் குறிப்பிடாமை, அந்த டின் மீன்களைக் களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை, விற்பனை செய்தமை மற்றும் விநியோகித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் டின் மீன் கையிருப்பும் குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Related Stories

மேலும் ›