LATEST
24 ரயில்வே தொழிற்சங்கங்கள் 48 மணி நேர போராட்டம்!ரஷ்யா–வட கொரியாவை இணைக்கும் முதல் சாலைப் பாலம் திறப்பு!இலங்கையர்களின் சட்டவிரோத செயல்களால் விசா வசதி இழப்பு – விஜித ஹேரத்!சுமணரத்ன தேரர் தொடர்ந்து விளக்கமறியலில்!38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில்!கொள்கை வகுப்பில் இளைஞர்களுக்கும் இடம் வேண்டும் –MP சாணக்கியன்!பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34% மட்டுமே!வெளிநாட்டு வேலைவாய்ப்பில் “வேலை மாஃபியா” – சஜித் குற்றச்சாட்டு!24 ரயில்வே தொழிற்சங்கங்கள் 48 மணி நேர போராட்டம்!ரஷ்யா–வட கொரியாவை இணைக்கும் முதல் சாலைப் பாலம் திறப்பு!இலங்கையர்களின் சட்டவிரோத செயல்களால் விசா வசதி இழப்பு – விஜித ஹேரத்!சுமணரத்ன தேரர் தொடர்ந்து விளக்கமறியலில்!38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில்!கொள்கை வகுப்பில் இளைஞர்களுக்கும் இடம் வேண்டும் –MP சாணக்கியன்!பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34% மட்டுமே!வெளிநாட்டு வேலைவாய்ப்பில் “வேலை மாஃபியா” – சஜித் குற்றச்சாட்டு!
உலகம்

இரண்டாகப் பிளந்து மூழ்கிய போர்க்கப்பல் – 118 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிப்பு!

August 13, 2026 · Tamil Ceylon LK

கடந்த 1908-ஆம் ஆண்டு ஆங்கிலக் கால்வாயில் மூழ்கிய அரச கடற்படைக்குச் சொந்தமான ‘ஹெச்.எம்.எஸ் டைகர்’ (HMS Tiger) என்ற போர்க்கப்பலின் சிதைந்த பகுதிகளை சுழியோடிகள் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

1908-ஆம் ஆண்டு இடம்பெற்ற கடற்படைப் பயிற்சியின் போது, மற்றொரு போர்க்கப்பல் மீது தற்செயலாக மோதியதில் ‘ஹெச்.எம்.எஸ் டைகர்’ இரண்டாகப் பிளந்து கடலில் மூழ்கியது.

இந்தச் சம்பவத்தில் கப்பலில் இருந்த 57 பணியாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்தநிலையில், ‘புரோஜெக்ட் எக்ஸ்ப்ளோர்’ என்ற ஆய்வுக் குழுவைச் சேர்ந்த லியோ ஃபீல்டிங் மற்றும் டான் மெக்முலன் ஆகியோர், ஐந்து ஆண்டுகள் வரலாற்று ஆவணங்களை ஆய்வு செய்து வைட் தீவுக்கு அருகே கடலுக்கு அடியில் இந்த போர்க்கப்பலின் எச்சங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

தற்போது பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பரிசீலனையில் உள்ள ‘ஆயுதப் படைகள் சட்டத்தின்’ கீழ், இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க போர்க்கப்பல் சிதைவுகள் சேதப்படுத்தப்படாமல் ‘பாதுகாக்கப்பட்ட பகுதியாக’ அறிவிக்கப்பட்டு பராமரிக்கப்படவுள்ளன.

Related Stories

மேலும் ›