வெள்ளை மாளிகை பதவிக்கு விடை கொடுக்கும் கரோலின் லீவிட்!

அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளராகப் பணியாற்றிய கரோலின் லீவிட், தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரம்பின் தீவிர ஆதரவாளரான கரோலினின் ராஜினாமாவை அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். கரோலின் வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் பதவியிலிருந்து விலகினாலும், அவர் தனக்கு மூத்த ஆலோசகராகத் தொடர்ந்து பணியாற்றுவார் என்று டிரம்ப் தனது ‘ட்ரூத்’ சமூக ஊடகக் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
28 வயதான கரோலின் லீவிட், டிரம்பின் கொள்கைகள் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்புகளின் போது பத்திரிகையாளர்களுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்ட, ‘அதிகப் பேசும்’ குணம் கொண்டவராக அறியப்படுகிறார். மேலும், இவர் அமெரிக்க வரலாற்றிலேயே மிக இளவயது வெள்ளை மாளிகை பத்திரிகைச் செயலாளரும் ஆவார்.
தனிப்பட்ட காரணங்களுக்காகத் தனது பதவியிலிருந்து விலகுவதாக கரோலின் அறிவித்திருந்தபோதிலும், டிரம்பின் செல்வாக்கு சரிந்து வருவதே அவர் பதவியிலிருந்து விலகுவதற்குக் காரணம் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.




