LATEST
24 ரயில்வே தொழிற்சங்கங்கள் 48 மணி நேர போராட்டம்!ரஷ்யா–வட கொரியாவை இணைக்கும் முதல் சாலைப் பாலம் திறப்பு!இலங்கையர்களின் சட்டவிரோத செயல்களால் விசா வசதி இழப்பு – விஜித ஹேரத்!சுமணரத்ன தேரர் தொடர்ந்து விளக்கமறியலில்!38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில்!கொள்கை வகுப்பில் இளைஞர்களுக்கும் இடம் வேண்டும் –MP சாணக்கியன்!பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34% மட்டுமே!வெளிநாட்டு வேலைவாய்ப்பில் “வேலை மாஃபியா” – சஜித் குற்றச்சாட்டு!24 ரயில்வே தொழிற்சங்கங்கள் 48 மணி நேர போராட்டம்!ரஷ்யா–வட கொரியாவை இணைக்கும் முதல் சாலைப் பாலம் திறப்பு!இலங்கையர்களின் சட்டவிரோத செயல்களால் விசா வசதி இழப்பு – விஜித ஹேரத்!சுமணரத்ன தேரர் தொடர்ந்து விளக்கமறியலில்!38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில்!கொள்கை வகுப்பில் இளைஞர்களுக்கும் இடம் வேண்டும் –MP சாணக்கியன்!பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34% மட்டுமே!வெளிநாட்டு வேலைவாய்ப்பில் “வேலை மாஃபியா” – சஜித் குற்றச்சாட்டு!
உள்ளூர்

டெங்கு பாதிப்பு 91,346 ஆக உயர்வு – தொடரும் அபாயம்!

August 14, 2026 · Tamil Ceylon LK

இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்தை கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இதன்படி, நேற்று (13) வரை நாட்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 91,346 ஆக உயர்ந்துள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

அத்துடன், டெங்கு நோய் காரணமாக 68 மரணங்களும் இதுவரை பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. 

இதில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கடந்த ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளனர். 

இதன்படி, ஜூலை மாதத்தில் மாத்திரம் 29,968 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

இதனிடையே, இம்மாதத்தின் நேற்றைய தினம் வரையிலான கடந்த 13 நாட்களில் 6,004 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. 

இந்த ஆண்டின் இதுவரை கழிந்த காலத்தில் அதிகளவிலான நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்தே பதிவாகியுள்ளனர். 

இதன்படி மேல் மாகாணத்தில் 48,383 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

அதேபோல், தென் மாகாணத்தில் 13,479 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 8,160 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Stories

மேலும் ›