LATEST
நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் காணாமல் போன சோகம்!பிற்பகலில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!இலங்கையை நெருங்கும் ஆறாவது பேரிடர் சவால் – சஜித் எச்சரிக்கை!முன்னாள் கடற்படைத் தளபதி காஞ்சன பானகொடவுக்கு புதிய பதவி!சர்வதேச நாய்கள் தினம் இன்றுசாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு – அதிவேக நெடுஞ்சாலைகளில் நெரிசல்!கண்டி பெரஹெரா – வாகனங்களுக்கு மாற்றுப் பாதைகள் அறிவிப்பு!நபிகள் நாயகம் காட்டிய நல்வழியை நினைவுகூரும் புனித நாள்!நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் காணாமல் போன சோகம்!பிற்பகலில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!இலங்கையை நெருங்கும் ஆறாவது பேரிடர் சவால் – சஜித் எச்சரிக்கை!முன்னாள் கடற்படைத் தளபதி காஞ்சன பானகொடவுக்கு புதிய பதவி!சர்வதேச நாய்கள் தினம் இன்றுசாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு – அதிவேக நெடுஞ்சாலைகளில் நெரிசல்!கண்டி பெரஹெரா – வாகனங்களுக்கு மாற்றுப் பாதைகள் அறிவிப்பு!நபிகள் நாயகம் காட்டிய நல்வழியை நினைவுகூரும் புனித நாள்!
உள்ளூர்

பிற்பகலில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

August 27, 2026 · Tamil Ceylon LK

நாட்டில் இன்றும் (27) சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக அளவிலான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அம்பாறை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும். 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (40-50) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related Stories

மேலும் ›