LATEST
பொரளையில் கட்டளையை மீறிய முச்சக்கரவண்டி மீது பொலிஸ் துப்பாக்கிச் சூடு!எல்-நினோ பாதிப்புக்கு தடையற்ற நீர் விநியோகத் திட்டம்!22வது திருத்த மனுக்கள்: இன்று மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க உத்தரவு!இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு வரை நீர் விநியோகம் தடை!ரிஷப் பண்ட் 2,534 ஓட்டங்கள் – தோனியின் சாதனை முறியடிப்பு!முதியோர் அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்கில்!இலங்கைக்கு நேர் மேலே சூரியன் – செப்டம்பர் 7 வரை தொடரும்!5ஆம் தர மாணவர்களின் பெறுபேறுகள் வெளியாகின!பொரளையில் கட்டளையை மீறிய முச்சக்கரவண்டி மீது பொலிஸ் துப்பாக்கிச் சூடு!எல்-நினோ பாதிப்புக்கு தடையற்ற நீர் விநியோகத் திட்டம்!22வது திருத்த மனுக்கள்: இன்று மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க உத்தரவு!இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு வரை நீர் விநியோகம் தடை!ரிஷப் பண்ட் 2,534 ஓட்டங்கள் – தோனியின் சாதனை முறியடிப்பு!முதியோர் அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்கில்!இலங்கைக்கு நேர் மேலே சூரியன் – செப்டம்பர் 7 வரை தொடரும்!5ஆம் தர மாணவர்களின் பெறுபேறுகள் வெளியாகின!
உள்ளூர்

இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு வரை நீர் விநியோகம் தடை!

September 3, 2026 · Tamil Ceylon LK

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் இன்று (03) இரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று இரவு 8.00 மணி முதல் நாளை (04) இரவு 8.00 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது. 

இதற்கமைய நுகேகொடை, கொஹுவலை, தெஹிவளை, கல்கிசை, ரத்மலானை, மொறட்டுவை, ராவதாவத்தை, சொய்சாபுரம், அங்குலானை, இதிபெத்த, கடுபெத்த, கல்தெமுல்ல, மோதறை, கொரளவெல்ல, எகொடவுயன மற்றும் கட்டுக்குருந்த ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது. 

அத்துடன், செத்சிறிபாய, ஹிம்புடான, உடுமுல்ல வீதி, மாளிகாகொடெல்ல, வங்கிச் சந்தி வீதி, டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை, ஹவ்லொக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, வைத்தியசாலை வீதி, ஜெயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை ஆகிய பகுதிகளுக்கும் இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீர் விநியோகம் இடை நிறுத்தப்படுவதால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, குறிப்பிட்ட காலப்பகுதியில் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories

மேலும் ›