LATEST
டயானாவின் ‘Revenge Dress’ நியூயோர்க்கில் ஏலம்!ஷிரான் பாசிக் தொடர்பான நிதி விசாரணையில் தந்தை கைது!அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை!கொங்கோவின் புகாவு நகரை உலுக்கிய தீ விபத்து!நாமல் விவகாரம் குறித்து சர்வதேச அமைப்பை நாடிய மிலிந்த!2027 முதல் அனைத்து சிம் பயனாளர்களுக்கும் முழு அடையாளச் சரிபார்ப்பு!பொதுப் போக்குவரத்தில் மக்களின் நம்பிக்கையை உயர்த்த அரசு திட்டம்!தனியார் வாகனப் பயன்பாட்டை குறைக்க புதிய மெட்ரோ பேருந்து திட்டம்!டயானாவின் ‘Revenge Dress’ நியூயோர்க்கில் ஏலம்!ஷிரான் பாசிக் தொடர்பான நிதி விசாரணையில் தந்தை கைது!அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை!கொங்கோவின் புகாவு நகரை உலுக்கிய தீ விபத்து!நாமல் விவகாரம் குறித்து சர்வதேச அமைப்பை நாடிய மிலிந்த!2027 முதல் அனைத்து சிம் பயனாளர்களுக்கும் முழு அடையாளச் சரிபார்ப்பு!பொதுப் போக்குவரத்தில் மக்களின் நம்பிக்கையை உயர்த்த அரசு திட்டம்!தனியார் வாகனப் பயன்பாட்டை குறைக்க புதிய மெட்ரோ பேருந்து திட்டம்!
உள்ளூர்

ஷிரான் பாசிக் தொடர்பான நிதி விசாரணையில் தந்தை கைது!

September 11, 2026 · Tamil Ceylon LK

காவல்துறையின் தடுப்புக் காவலில் உள்ள பிரதான போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்கின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதிமோசடி குற்றச்சாட்டின் கீழ் மத்திய குற்றத் தடுப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

கம்பஹா பகுதியில் அமைந்துள்ள சொகுசு தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான வீடு ஒன்றை ஷிரான் பாசிக் வாங்கியுள்ளதாகவும், அது அவரது தந்தையின் பெயரிலேயே கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்கமைய, இது குறித்து வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக மத்திய குற்றத் தடுப்புப் பிரிவில் முன்னிலையாகுமாறு ஷிரான் பாசிக்கின் தந்தைக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories

மேலும் ›