ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு – செப்டம்பர் 30 மீண்டும் விசாரணை!

இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுபடுத்தியதாகக் குற்றம் சுமத்தி, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை மீண்டும் வரும் செப்டம்பர் 30ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதிவாதியான கலகொடஅத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Follow & Share




