LATEST
முக்கிய மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை உபகரண பற்றாக்குறை!வாகன விலைகள் கணிசமாக குறைந்தன – இறக்குமதியாளர்கள் சங்கம்!ICC மாத வீரர் விருதில் இலங்கைக்கு பெருமை சேர்த்த சொனால் தினூஷ!அவுஸ்திரேலியா செல்லும் மாணவர்களே கவனம் – புதிய விதிகள் வரலாம்!சட்ட நடைமுறைக்கு புறம்பாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு!இலஞ்ச ஆணைக்குழு தொடர்ந்த வழக்கு – அடுத்த கட்ட விசாரணைக்கு உத்தரவு!நீதிபதிகளின் சம்பளத்திலும் APIT வரி – உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!கோட்டை நீதவான் நீதிமன்ற ஊழியர் இலஞ்ச வழக்கில் கைது!முக்கிய மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை உபகரண பற்றாக்குறை!வாகன விலைகள் கணிசமாக குறைந்தன – இறக்குமதியாளர்கள் சங்கம்!ICC மாத வீரர் விருதில் இலங்கைக்கு பெருமை சேர்த்த சொனால் தினூஷ!அவுஸ்திரேலியா செல்லும் மாணவர்களே கவனம் – புதிய விதிகள் வரலாம்!சட்ட நடைமுறைக்கு புறம்பாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு!இலஞ்ச ஆணைக்குழு தொடர்ந்த வழக்கு – அடுத்த கட்ட விசாரணைக்கு உத்தரவு!நீதிபதிகளின் சம்பளத்திலும் APIT வரி – உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!கோட்டை நீதவான் நீதிமன்ற ஊழியர் இலஞ்ச வழக்கில் கைது!
உள்ளூர்

ஊவா, கிழக்கு, முல்லைத்தீவு, பொலன்னறுவையில் பிற்பகல் மழை!

September 17, 2026 · Tamil Ceylon LK

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

வடமேல் மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். 

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

மேலும் ›