LATEST
IPL 2027 மெகா ஏலத்தை இந்தியாவில் நடத்த திட்டம்கண்காணிப்பு இன்னும் முடியவில்லை – அபாய குடும்பங்கள் மேலும் அதிகரிக்கலாம்!ருமேஷ் தரங்கவின் விளையாட்டு உபகரண சேதம் குறித்து Turkish Airlines உடன் பேச்சு!சொகுசு வாகன வழக்கில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு புதிய விசாரணை திகதி!ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு – செப்டம்பர் 30 மீண்டும் விசாரணை!அதிகாலை 1.10க்கு கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்ட ஷிரந்தி!பிற்பகலுக்கு பின் ஊவா, கிழக்கு, வடமத்திய பகுதிகளில் இடியுடன் மழை!திர்க்கட்சி உறுப்பினர்கள் மேசை ஏறியதால் கூட்டம் கைகலப்பாக மாறியது!IPL 2027 மெகா ஏலத்தை இந்தியாவில் நடத்த திட்டம்கண்காணிப்பு இன்னும் முடியவில்லை – அபாய குடும்பங்கள் மேலும் அதிகரிக்கலாம்!ருமேஷ் தரங்கவின் விளையாட்டு உபகரண சேதம் குறித்து Turkish Airlines உடன் பேச்சு!சொகுசு வாகன வழக்கில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு புதிய விசாரணை திகதி!ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு – செப்டம்பர் 30 மீண்டும் விசாரணை!அதிகாலை 1.10க்கு கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்ட ஷிரந்தி!பிற்பகலுக்கு பின் ஊவா, கிழக்கு, வடமத்திய பகுதிகளில் இடியுடன் மழை!திர்க்கட்சி உறுப்பினர்கள் மேசை ஏறியதால் கூட்டம் கைகலப்பாக மாறியது!
விளையாட்டு

IPL 2027 மெகா ஏலத்தை இந்தியாவில் நடத்த திட்டம்

September 16, 2026 · Tamil Ceylon LK

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் 2027 ஆம் ஆண்டுக்கான மெகா ஏலத்தை இந்தியாவில் நடத்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் தொடரின் மூலம் திறமையான வீரர்களை அடையாளம் கண்டு, அவர்கள் இந்திய அணியில் சேர்க்கப்படுகின்றனர்.

அதன்படி, இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், அணிகளுக்குத் தேவையான வீரர்களைத் தேர்வு செய்வதற்காக ஆண்டுதோறும் மெகா ஏலம் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலம் இந்தியாவில் நடைபெற்ற நிலையில், 2024ஆம் ஆண்டு டுபாயிலும், 2025ஆம் ஆண்டு ஜெட்டாவிலும், 2026ஆம் ஆண்டு அபுதாபியிலும் ஏலங்கள் நடைபெற்றன.

இந்தநிலையில், அடுத்த ஆண்டுக்கான ஏலத்தை மீண்டும் இந்தியாவில் நடத்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணிகளின் நிர்வாகக் குழுவினர் வெளிநாடுகளுக்குச் செல்வதில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்களை கருத்தில்கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், 2027ஆம் ஆண்டுக்கான ஏலத்தை இந்தியாவில் நடத்த திட்டமிட்ட போதிலும், எந்த நகரில் நடத்தப்படும் என்பது குறித்த முடிவுகள் உறுதி செய்யப்படவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை 2028ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலத்தை மீண்டும் வெளிநாட்டில் நடத்துவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Stories

மேலும் ›