T20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் மிட்சல் ஸ்டார்க் !
அவுஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர்...
Published September 2, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
அவுஸ்திரேலியா நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்த இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
35 வயதான மிட்சல் ஸ்டார்க், 65 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளார்
அத்துடன் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடரை அவுஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்கும் அவர் பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.