LATEST
எசல பெரஹேராவில் போதைப்பொருளுடன் காவடி குழுவினர் கைது!தொடரை யார் கைப்பற்றப் போகிறார்கள்? இன்று இலங்கை–பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதல்!நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க முன் மக்களின் கருத்தைக் கேளுங்கள்!சுரேஷ் சாலே தாக்கல் செய்த ரிட் மனு இன்று மீண்டும் விசாரணை!வெளிநாட்டு கையிருப்பு இலக்கை அரசு அடையவில்லை! கம்மன்பில குற்றச்சாட்டு.கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்வுகூறு.விவசாயிகளை புறக்கணிக்கிறாரா அமைச்சர்? தேசிய விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு!ரூ.2 கோடி நிதி மோசடி வழக்கு… 5 சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை!எசல பெரஹேராவில் போதைப்பொருளுடன் காவடி குழுவினர் கைது!தொடரை யார் கைப்பற்றப் போகிறார்கள்? இன்று இலங்கை–பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதல்!நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க முன் மக்களின் கருத்தைக் கேளுங்கள்!சுரேஷ் சாலே தாக்கல் செய்த ரிட் மனு இன்று மீண்டும் விசாரணை!வெளிநாட்டு கையிருப்பு இலக்கை அரசு அடையவில்லை! கம்மன்பில குற்றச்சாட்டு.கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்வுகூறு.விவசாயிகளை புறக்கணிக்கிறாரா அமைச்சர்? தேசிய விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு!ரூ.2 கோடி நிதி மோசடி வழக்கு… 5 சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை!
உலகம்

இஸ்ரேலின் பிளெப்ராக் நகரில் ஏவுகணைத் தாக்குதல்

April 3, 2026 · Tamil Ceylon LK

ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்று இஸ்ரேலின் மத்திய பகுதியில் இன்று அதிகாலை விழுந்து வெடித்துள்ளது.கடந்த ஒரு மணி நேரத்திற்குள் இடம்பெற்ற இந்தத் தாக்குதலால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

ஈரானில் இருந்து ஏவுகணை ஏவப்பட்டதை ரேடார் கட்டமைப்பு கண்டறிந்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலிய பாதுகாப்புத் தரப்பினரால் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இஸ்ரேலின் மத்திய பகுதிகளை இலக்கு வைத்து வந்த இந்த ஏவுகணை, பிளெப்ராக் நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த ஏவுகணை வான்பரப்பிலேயே இடைமறித்து அழிக்கப்பட்ட போதிலும், அது ஒரு ‘கிளஸ்டர்’ (Cluster-type) வகை வெடிச்சீராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் மற்றும் சேத விபரங்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகளில் பாதுகாப்புத் தரப்பினர் ஈடுபட்டு வருவதாக அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

Related Stories

மேலும் ›