LATEST
ஆகஸ்ட் 18 முதல் ஆசியக் கோப்பை – இலங்கை அணி அறிவிப்பு!டெங்கு பாதிப்பு 91,346 ஆக உயர்வு – தொடரும் அபாயம்!பாதாள உலக நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நாடு முழுவதும் விசேட திட்டம்!19,892 புத்தகங்கள் விநியோகிக்கப்படவில்லை – பொலிஸார் விசாரணை!ஜெனீவாவில் இன்று இலங்கையின் CRPD முதல் மதிப்பாய்வு!நீதித்துறையின் சுதந்திரத்தைப் பணயம் வைக்க முடியாது!ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் அடுத்த கட்டம் – எதிர்தரப்பு விசாரணைக்கு நீதிமன்றம் தீர்மானம்!ட்ரம்பின் உயிருக்கு ஆபத்து என இஸ்ரேலிய உளவுத்துறை எச்சரிக்கை!ஆகஸ்ட் 18 முதல் ஆசியக் கோப்பை – இலங்கை அணி அறிவிப்பு!டெங்கு பாதிப்பு 91,346 ஆக உயர்வு – தொடரும் அபாயம்!பாதாள உலக நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நாடு முழுவதும் விசேட திட்டம்!19,892 புத்தகங்கள் விநியோகிக்கப்படவில்லை – பொலிஸார் விசாரணை!ஜெனீவாவில் இன்று இலங்கையின் CRPD முதல் மதிப்பாய்வு!நீதித்துறையின் சுதந்திரத்தைப் பணயம் வைக்க முடியாது!ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் அடுத்த கட்டம் – எதிர்தரப்பு விசாரணைக்கு நீதிமன்றம் தீர்மானம்!ட்ரம்பின் உயிருக்கு ஆபத்து என இஸ்ரேலிய உளவுத்துறை எச்சரிக்கை!
அரசியல்

ஆட்சி அமைக்க தவெக தலைவர் விஜய்க்கு ஆளுநர் முறைப்படி அழைப்பு!

May 7, 2026 · Tamil Ceylon LK

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கடந்த 4 நாட்களாக நீடித்து வந்த அரசியல் பரபரப்பு ஒரு முடிவுக்கு வந்துள்ளது. தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்க்கு ஆட்சி அமைக்க முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.

தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும் பெரும்பான்மை பலத்தை (118 இடங்கள்) நிரூபிக்க முடியாமல் இருந்த விஜய்க்கு, காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, மொத்த பலம் 113-ஆக உயர்ந்த நிலையில், ஜனநாயக முறைப்படி தனிப்பெரும் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க வருமாறு விஜய்க்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “ஆட்சி அமைப்பதில் திமுக எந்த இடையூறும் செய்யாது” என்றும் “அரசியலமைப்புச் சிக்கலைத் தவிர்க்கவே தாம் விரும்புவதாகவும்” தெரிவித்திருந்தது தவெக ஆட்சி அமைப்பதற்கான பாதையை எளிதாக்கியது. திமுக-வின் இந்த ஜனநாயக ரீதியான அணுகுமுறை தமிழக அரசியலில் ஒரு ஆரோக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

ஆளுநரின் அழைப்பைத் தொடர்ந்து, தவெக தரப்பில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் போக்கால அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளன.எதிர்வரும் மே 10, 2026 அன்று பதவியேற்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

மேலும் ›