LATEST
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !தலா ரூ.50 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் ரேணுக பெரேரா விடுவிப்பு.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் உலக இதய தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது!பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை வந்த அமெரிக்க பசிபிக் இராணுவத்தின் பிரதி கட்டளையிடும் ஜெனரல்!ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மூன்றாண்டுகளில் 100 திருட்டுச் சம்பவங்கள் அம்பலம்!ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்த விராட் கோலி!நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !தலா ரூ.50 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் ரேணுக பெரேரா விடுவிப்பு.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் உலக இதய தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது!பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை வந்த அமெரிக்க பசிபிக் இராணுவத்தின் பிரதி கட்டளையிடும் ஜெனரல்!ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மூன்றாண்டுகளில் 100 திருட்டுச் சம்பவங்கள் அம்பலம்!ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்த விராட் கோலி!
உலகம்

தமிழக சட்டசபை புதிய சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர் பொறுப்பேற்பு!

May 12, 2026 · Tamil Ceylon LK

தமிழக சட்டசபையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

பின்னர் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபாநாயகர், முதலமைச்சர் விஜய் மற்றும் தாம் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் எனக் குறிப்பிட்டார்.

“ஒரே கல்லூரியில் படித்திருந்தாலும், அரசை நடத்துவதில் திமுகதான் சீனியர் பேட்ஜ். 1967-ஆம் ஆண்டிலேயே ஆட்சிக்கு வந்தது திமுக. அந்த அடிப்படையில் எங்களது அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறோம். அதை ஏற்றுக்கொள்ள நீங்களும் தயாராக இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் நலனே மிக முக்கியம் என வலியுறுத்திய அவர், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள சபாநாயகரை முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அவை முன்னவர் இணைந்து இருக்கையில் அமர வைத்திருப்பது சிறப்பான விஷயம் எனக் கூறினார்.

மேலும், “இரு தரப்பினரையும் நீங்கள் அரவணைத்து நடத்த வேண்டும். நீங்கள் கோபப்பட மாட்டீர்கள் என்று தெரியும். உங்களைக் கோபப்படுத்தும் வகையில் எங்களும் எந்த செயலிலும் ஈடுபட மாட்டோம்” எனத் தெரிவித்தார்.

சட்டமன்ற ஜனநாயகத்தில் ஆளுங்கட்சி காதுகளாகவும், எதிர்க்கட்சி குரலாகவும் இருக்க வேண்டும் என்றும், அதில்தான் அவையின் பெருமை அடங்கியுள்ளது என்றும் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார்.

முந்தைய சட்டசபைகளில் ஆளுங்கட்சிக்கு அதிக உறுப்பினர்கள் இருந்த நிலையில், இந்த முறை ஆளுங்கட்சிக்கு இணையான வலிமையுடன் எதிர்க்கட்சி அமைந்துள்ளதாகவும், அதுவே இந்த பேரவையின் கூடுதல் சிறப்பாகும் என்றும் தெரிவித்தார்.

மேலும், “எதிர்க்கட்சி வலிமையாக இருந்து அரசை வழிநடத்த வேண்டும். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் என மக்கள் நமக்குப் பொறுப்பு அளித்துள்ளனர். மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் எங்களது செயல்பாடுகள் இருக்கும்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Related Stories

மேலும் ›