LATEST
சுரேஷ் சலேவின் தொலைபேசி, மடிக்கணினி கடவுச்சொற்களை CID-க்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு!ஜூன் மாதத்தில் பணவீக்கம் மீண்டும் உயர்வு! மக்களின் வாழ்க்கைச் செலவில் கூடுதல் சுமை!அரிசியில் புதிய பொருளாதாரப் புரட்சி? அரசின் புதிய திட்டம்!உண்ணாவிரதத்தை முடிக்க முடிவு செய்த சுரேஷ் சலே!கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,024 புதிய டெங்கு நோயாளிகள்!முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தீவிர விசாரணை.அரிசி கடன் முதல் வாழ்க்கைச் செலவு வரை… அரசை கடுமையாக சாடிய நாமல் ராஜபக்ஷ.டிரம்பின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்சுரேஷ் சலேவின் தொலைபேசி, மடிக்கணினி கடவுச்சொற்களை CID-க்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு!ஜூன் மாதத்தில் பணவீக்கம் மீண்டும் உயர்வு! மக்களின் வாழ்க்கைச் செலவில் கூடுதல் சுமை!அரிசியில் புதிய பொருளாதாரப் புரட்சி? அரசின் புதிய திட்டம்!உண்ணாவிரதத்தை முடிக்க முடிவு செய்த சுரேஷ் சலே!கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,024 புதிய டெங்கு நோயாளிகள்!முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தீவிர விசாரணை.அரிசி கடன் முதல் வாழ்க்கைச் செலவு வரை… அரசை கடுமையாக சாடிய நாமல் ராஜபக்ஷ.டிரம்பின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்
உள்ளூர்

இலங்கையை அச்சுறுத்தும் டெங்கு!

June 2, 2026 · Tamil Ceylon LK

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 33,572 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், டெங்கு காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே மாதத்தில் மட்டும் 8,321 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சமூக சுகாதார விசேட நிபுணர் மருத்துவர் துஷானி தாபரே தெரிவித்துள்ளார்.

டெங்கு தொற்றாளர்களில் பெரும்பாலானோர் கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாடு முழுவதும் 72 சுகாதார அதிகாரி (MOH) பிரிவுகள் டெங்கு பரவும் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த ஆண்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களில் சுமார் 50 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அதேவேளை, தென் மாகாணத்தில் 16 சதவீதமும், சபரகமுவ மாகாணத்தில் 9 சதவீதமும் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் தரப்புகள் தெரிவித்துள்ளன.

டெங்கு பரவலை கட்டுப்படுத்த மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பதுடன், கொசு பெருகும் இடங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

மேலும் ›