LATEST
சுரேஷ் சலேவின் தொலைபேசி, மடிக்கணினி கடவுச்சொற்களை CID-க்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு!ஜூன் மாதத்தில் பணவீக்கம் மீண்டும் உயர்வு! மக்களின் வாழ்க்கைச் செலவில் கூடுதல் சுமை!அரிசியில் புதிய பொருளாதாரப் புரட்சி? அரசின் புதிய திட்டம்!உண்ணாவிரதத்தை முடிக்க முடிவு செய்த சுரேஷ் சலே!கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,024 புதிய டெங்கு நோயாளிகள்!முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தீவிர விசாரணை.அரிசி கடன் முதல் வாழ்க்கைச் செலவு வரை… அரசை கடுமையாக சாடிய நாமல் ராஜபக்ஷ.டிரம்பின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்சுரேஷ் சலேவின் தொலைபேசி, மடிக்கணினி கடவுச்சொற்களை CID-க்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு!ஜூன் மாதத்தில் பணவீக்கம் மீண்டும் உயர்வு! மக்களின் வாழ்க்கைச் செலவில் கூடுதல் சுமை!அரிசியில் புதிய பொருளாதாரப் புரட்சி? அரசின் புதிய திட்டம்!உண்ணாவிரதத்தை முடிக்க முடிவு செய்த சுரேஷ் சலே!கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,024 புதிய டெங்கு நோயாளிகள்!முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தீவிர விசாரணை.அரிசி கடன் முதல் வாழ்க்கைச் செலவு வரை… அரசை கடுமையாக சாடிய நாமல் ராஜபக்ஷ.டிரம்பின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்
உள்ளூர்

இன்றைய காலநிலை!

June 7, 2026 · Tamil Ceylon LK

இலங்கையின் பல பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களுடன், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கு அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, அனுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறியளவிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

மேலும் ›