LATEST
சுரேஷ் சலேவின் தொலைபேசி, மடிக்கணினி கடவுச்சொற்களை CID-க்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு!ஜூன் மாதத்தில் பணவீக்கம் மீண்டும் உயர்வு! மக்களின் வாழ்க்கைச் செலவில் கூடுதல் சுமை!அரிசியில் புதிய பொருளாதாரப் புரட்சி? அரசின் புதிய திட்டம்!உண்ணாவிரதத்தை முடிக்க முடிவு செய்த சுரேஷ் சலே!கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,024 புதிய டெங்கு நோயாளிகள்!முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தீவிர விசாரணை.அரிசி கடன் முதல் வாழ்க்கைச் செலவு வரை… அரசை கடுமையாக சாடிய நாமல் ராஜபக்ஷ.டிரம்பின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்சுரேஷ் சலேவின் தொலைபேசி, மடிக்கணினி கடவுச்சொற்களை CID-க்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு!ஜூன் மாதத்தில் பணவீக்கம் மீண்டும் உயர்வு! மக்களின் வாழ்க்கைச் செலவில் கூடுதல் சுமை!அரிசியில் புதிய பொருளாதாரப் புரட்சி? அரசின் புதிய திட்டம்!உண்ணாவிரதத்தை முடிக்க முடிவு செய்த சுரேஷ் சலே!கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,024 புதிய டெங்கு நோயாளிகள்!முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தீவிர விசாரணை.அரிசி கடன் முதல் வாழ்க்கைச் செலவு வரை… அரசை கடுமையாக சாடிய நாமல் ராஜபக்ஷ.டிரம்பின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்
உள்ளூர்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

June 12, 2026 · Tamil Ceylon LK

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்றைய தினம் (12) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அப்பகுதிகளின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் சில தடவைகள் மழை பெய்யக்கூடுவதுடன், ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்தகாற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories

மேலும் ›