LATEST
சுரேஷ் சலேவின் தொலைபேசி, மடிக்கணினி கடவுச்சொற்களை CID-க்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு!ஜூன் மாதத்தில் பணவீக்கம் மீண்டும் உயர்வு! மக்களின் வாழ்க்கைச் செலவில் கூடுதல் சுமை!அரிசியில் புதிய பொருளாதாரப் புரட்சி? அரசின் புதிய திட்டம்!உண்ணாவிரதத்தை முடிக்க முடிவு செய்த சுரேஷ் சலே!கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,024 புதிய டெங்கு நோயாளிகள்!முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தீவிர விசாரணை.அரிசி கடன் முதல் வாழ்க்கைச் செலவு வரை… அரசை கடுமையாக சாடிய நாமல் ராஜபக்ஷ.டிரம்பின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்சுரேஷ் சலேவின் தொலைபேசி, மடிக்கணினி கடவுச்சொற்களை CID-க்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு!ஜூன் மாதத்தில் பணவீக்கம் மீண்டும் உயர்வு! மக்களின் வாழ்க்கைச் செலவில் கூடுதல் சுமை!அரிசியில் புதிய பொருளாதாரப் புரட்சி? அரசின் புதிய திட்டம்!உண்ணாவிரதத்தை முடிக்க முடிவு செய்த சுரேஷ் சலே!கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,024 புதிய டெங்கு நோயாளிகள்!முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தீவிர விசாரணை.அரிசி கடன் முதல் வாழ்க்கைச் செலவு வரை… அரசை கடுமையாக சாடிய நாமல் ராஜபக்ஷ.டிரம்பின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்
உள்ளூர்

நுரைச்சோலையில் விசேட களப்பரிசோதனை!

June 16, 2026 · Tamil Ceylon LK

2009ஆம் ஆண்டு முதல் இதுவரையிலான காலப்பகுதியில் நிலக்கரி இறக்குமதியின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் டி.வி. பந்துலசேன உள்ளிட்ட விசாரணை அதிகாரிகள், கடந்த 14ஆம் திகதி நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டனர்.

இங்கு மேற்கொள்ளப்பட்ட களப் பரிசோதனையின் போது, நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது முதல் நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் வரை முழுமையான செயல்முறையும் அவதானிக்கப்பட்டதுடன், நிலக்கரி இறக்குதல், சேமித்து வைத்தல், எழுமாறான மாதிரிகளைப் பெறுதல், மாதிரிப் பரிசோதனை மற்றும் பிரதான கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் போன்ற விடயங்கள் குறித்து விசாரணை அதிகாரிகள் கவனம் செலுத்தினர்.

இலங்கையில் நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி செயல்முறை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல், இந்த ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதிக்குள் அரசாங்கத்திற்கு உரிய வரையறுக்கப்பட்ட இலங்கை நிலக்கரி (தனியார்) நிறுவனம் அல்லது அது சார்ந்த நிறுவனங்களினால் இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் போதும் மற்றும் மின்சார உற்பத்தியின் போதும் முறைகேடுகள் அல்லது சட்டவிரோத செயல்கள் ஏதேனும் இடம்பெற்றுள்ளனவா என்பதை ஆராய்ந்து பார்ப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Related Stories

மேலும் ›