கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நீதிமன்ற உத்தரவு!

மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் 2011-ஆம் ஆண்டு காணாமல் போனது தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கொழும்பு பிரதான நீதி மன்றத்திலிருந்து செப்டம்பர் 29 அன்று காணொளிக் காட்சி வாயிலாக சாட்சியமளிக்குமாறு யாழ்ப்பாண நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
காணாமல் போன சம்பவங்களின் போது பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றி வந்த ராஜபக்ச, விசாரணையில் சாட்சியமளிப்பதற்காக 2019 செப்டம்பர் 27 அன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தால் முதலில் அழைக்கப்பட்டார்.
பாதுகாப்புக் காரணங்களைக் காரணம் காட்டி, மின்னணு ஒளி-கேள்வி வழிமுறைகள் மூலம் ஆஜராகக் கோரியதை அடுத்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராஜபக்சவுக்கு காணொளி வாயிலாக சாட்சியமளிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ராஜபக்சவின் வழக்கறிஞர்கள் காரணம் காட்டியதால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என நீதிமன்ற ஆவணங்கள் காட்டுகின்றன.
அதனைத் தொடர்ந்து, வழக்கு நடவடிக்கைகள் தொடர்வதற்கு ஏதுவாக, அத்தகைய கோரிக்கைகள் முறைப்படி முன்வைக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.




