LATEST
உலகின் முக்கிய எண்ணெய் பாதையில் சிக்கல் – எரிசக்தி சந்தையில் அழுத்தம்!இரண்டாகப் பிளந்து மூழ்கிய போர்க்கப்பல் – 118 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிப்பு!வெள்ளை மாளிகை பதவிக்கு விடை கொடுக்கும் கரோலின் லீவிட்!இலங்கையில் உற்பத்தி செய்யுங்கள்; இந்தியாவுக்கு வரியின்றி ஏற்றுமதி செய்யுங்கள்இம்ரான் கான் உடல்நிலை குறித்து பரபரப்பு – ராணுவம் வெளியிட்ட தகவல்!அமெரிக்கத் தூதராக எரிக் மேயர் உத்தியோகபூர்வமாக பதவியேற்பு!இளைஞர்களின் உணவுப் பழக்கத்தில் மாற்றம் மருத்துவர் எச்சரிக்கை!நவீன விவசாய இயந்திரங்களை இலங்கைக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை!உலகின் முக்கிய எண்ணெய் பாதையில் சிக்கல் – எரிசக்தி சந்தையில் அழுத்தம்!இரண்டாகப் பிளந்து மூழ்கிய போர்க்கப்பல் – 118 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிப்பு!வெள்ளை மாளிகை பதவிக்கு விடை கொடுக்கும் கரோலின் லீவிட்!இலங்கையில் உற்பத்தி செய்யுங்கள்; இந்தியாவுக்கு வரியின்றி ஏற்றுமதி செய்யுங்கள்இம்ரான் கான் உடல்நிலை குறித்து பரபரப்பு – ராணுவம் வெளியிட்ட தகவல்!அமெரிக்கத் தூதராக எரிக் மேயர் உத்தியோகபூர்வமாக பதவியேற்பு!இளைஞர்களின் உணவுப் பழக்கத்தில் மாற்றம் மருத்துவர் எச்சரிக்கை!நவீன விவசாய இயந்திரங்களை இலங்கைக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை!
உள்ளூர்

இளைஞர்களின் உணவுப் பழக்கத்தில் மாற்றம் மருத்துவர் எச்சரிக்கை!

August 13, 2026 · Tamil Ceylon LK

இளைஞர்கள் மத்தியில் குடல் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதாக இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க தெரிவித்துள்ளார். 

இளம் தலைமுறையினர் செயற்கை உணவுகளை அதிகம் உட்கொள்வதில் ஆர்வம் காட்டுவதே இந்த நிலைமைக்குக் காரணம் என அவர் கூறுகிறார். 

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க இதனைத் தெரிவித்தார். 

“நமது குடலுக்கும் மூளைக்கும் இடையே ஒரு சிக்கலான தொடர்பு உள்ளது. அதை நாம் ‘குடல்-மூளை அச்சு’ (gut-brain axis) என்று கூறுகிறோம். அதாவது நாம் அதிக மன அழுத்தத்தில் இருந்தாலோ அல்லது பதற்றத்தில் இருந்தாலோ, அது தானாகவே நமது குடலிலும் உணரப்படும். இந்தச் சிக்கலான செயல்முறை மற்றும் நாம் உட்கொள்ளும் உணவுப் பிரச்சனைகள் ஆகியவற்றின் சேர்க்கையால் IBS (Irritable Bowel Syndrome – எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி) நிலை ஏற்படலாம். இந்த நிலை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நமது வாழ்க்கை முறை இப்போது மாறியுள்ளது; உணவுப் பழக்கவழக்கங்களும் மாறியுள்ளன. காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் மற்றும் தானியங்கள் போன்ற இயற்கை உணவு முறையிலிருந்து பல இளைஞர்கள் விலகி, இலகுவாகக் கிடைப்பதால் செயற்கை உணவுகளை நோக்கிச் செல்வதை நான் காண்கிறேன். இதன் காரணமாக, அவர்களிடம் தற்போது IBS நிலை அதிகமாகக் காணப்படுகிறது.” என்றார்.

Related Stories

மேலும் ›