LATEST
ஹிருணிகா வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை நவம்பரில்!கண்டி நகரில் நாளை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம்!நெல் அறுவடையுடன் கொள்வனவும் தீவிரம்!தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி – விலை மீண்டும் உயர்வு!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறதுகாலி டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்டம் விறுவிறுப்பு!கொழும்பை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சிறுவனின் உயிரிழப்பு!மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!ஹிருணிகா வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை நவம்பரில்!கண்டி நகரில் நாளை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம்!நெல் அறுவடையுடன் கொள்வனவும் தீவிரம்!தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி – விலை மீண்டும் உயர்வு!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறதுகாலி டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்டம் விறுவிறுப்பு!கொழும்பை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சிறுவனின் உயிரிழப்பு!மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
உள்ளூர்

வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது

August 17, 2026 · Tamil Ceylon LK

வனஜீவராசிகள் திணைக்கள கால்நடை வைத்தியர்கள் ஆரம்பித்துள்ள சட்டப்படி பணி செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, அவசர காலங்களில் பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் கால்நடை வைத்திய அதிகாரிகளின் சேவைகளைப் பெற்றுக்கொள்ள சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் மிருகக்காட்சிச்சாலை கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

மேலதிக சேவை நேரக் கொடுப்பனவை வழங்குதல், அபாயக் கொடுப்பனவை வழங்குதல், விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் கடமையாற்றும் முறையை முறைப்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஜூன் மாதம் 1ஆம் திகதி முதல் அந்த சங்கம் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றது. 

இதன்படி, இரண்டரை மாதங்களுக்கும் மேலாக வனஜீவராசிகள் திணைக்கள கால்நடை வைத்தியர்கள் குறித்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

எவ்வாறாயினும், தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க அதிகாரிகள் இதுவரை தவறியுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் மிருகக்காட்சிச்சாலை கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் நிஹால் புஷ்பகுமார குறிப்பிட்டுள்ளார். 

தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் எனவும் வைத்தியர் நிஹால் புஷ்பகுமார மேலும் தெரிவித்துள்ளார்.

Related Stories

மேலும் ›