LATEST
பொரளையில் கட்டளையை மீறிய முச்சக்கரவண்டி மீது பொலிஸ் துப்பாக்கிச் சூடு!எல்-நினோ பாதிப்புக்கு தடையற்ற நீர் விநியோகத் திட்டம்!22வது திருத்த மனுக்கள்: இன்று மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க உத்தரவு!இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு வரை நீர் விநியோகம் தடை!ரிஷப் பண்ட் 2,534 ஓட்டங்கள் – தோனியின் சாதனை முறியடிப்பு!முதியோர் அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்கில்!இலங்கைக்கு நேர் மேலே சூரியன் – செப்டம்பர் 7 வரை தொடரும்!5ஆம் தர மாணவர்களின் பெறுபேறுகள் வெளியாகின!பொரளையில் கட்டளையை மீறிய முச்சக்கரவண்டி மீது பொலிஸ் துப்பாக்கிச் சூடு!எல்-நினோ பாதிப்புக்கு தடையற்ற நீர் விநியோகத் திட்டம்!22வது திருத்த மனுக்கள்: இன்று மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க உத்தரவு!இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு வரை நீர் விநியோகம் தடை!ரிஷப் பண்ட் 2,534 ஓட்டங்கள் – தோனியின் சாதனை முறியடிப்பு!முதியோர் அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்கில்!இலங்கைக்கு நேர் மேலே சூரியன் – செப்டம்பர் 7 வரை தொடரும்!5ஆம் தர மாணவர்களின் பெறுபேறுகள் வெளியாகின!
விளையாட்டு

ரிஷப் பண்ட் 2,534 ஓட்டங்கள் – தோனியின் சாதனை முறியடிப்பு!

September 3, 2026 · Tamil Ceylon LK

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.தோனி மற்றும் விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரரான ரிஷப் பண்ட் ஆகியோர் தங்களது நண்பர்களுடன் இணைந்து விருந்து ஒன்றில் பங்கேற்ற காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறைவடைந்ததை அடுத்து, இவர்கள் இருவரும் தங்களது நண்பர்களுடன் இணைந்து இந்த விருந்தொன்றில் பங்கேற்றுள்ளனர்.

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, வெளிநாட்டு அல்லது நடுநிலையான மைதானங்களில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த இந்திய விக்கெட் காப்பாளர் என்ற தோனியின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்தார்.

ரிஷப் பண்ட் 2,534 ஓட்டங்களைப் பெற்று , தோனியின் (2,496 ஓட்டங்கள்) சாதனையை முறியடித்துள்ளார்.

அத்துடன் , டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் அடம் கில்கிறிஸ்டை (100 சிக்ஸர்கள்) பின்னுக்குத் தள்ளி ரிஷப் பண்ட் (102 சிக்ஸர்கள்) 3 ஆவது இடத்தையும் பிடித்துள்ளார்.

Related Stories

மேலும் ›