பாகிஸ்தானை வீழ்த்த களமிறங்கும் இங்கிலாந்து!

சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் நிறைவின்போது, பாகிஸ்தான் அணி, தமது இரண்டாம் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 449 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இதன்படி அந்த அணி 129 ஓட்டங்களால் இங்கிலாந்து அணியைக் காட்டிலும் முன்னிலையில் உள்ளது.
இந்தநிலையில் 130 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கை நோக்கி, இங்கிலாந்து அணி, தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
முன்னதாக பாகிஸ்தான் அணி தமது முதல் இன்னிங்ஸில் 133 ஓட்டங்களையும் இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் 453 ஓட்டங்களையும் பெற்றிருந்தன.
ஏற்கனவே இரண்டு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரை 2க்கு பூச்சியம் என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
Follow & Share




