LATEST
Airbus கொள்வனவு சர்ச்சை – நாமல் மீது விசாரணை தொடர்கிறது!ஜே.ஆர். தொடங்கிய சமூக–பொருளாதார மாற்றத்தை தொடர கைகோர்ப்போம்” – ரணில்“பொதுப் பாதுகாப்புக்கு மக்கள் பங்கேற்பு அவசியம்” – நிலந்தி கொட்டாஹச்சிபல்கலைக்கழக அமைப்பின் பிரச்சினைகள் குறித்து தீர்வின்றி முடிந்த கலந்துரையாடல்!ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் – தீர்ப்பு 30ஆம் திகதி!இலங்கையை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி T20 தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து!சிறுவர் பராமரிப்பு நிலைய பிள்ளைகளுக்கு ரூ.20 இலட்சம் வீட்டு உதவி!பொது முகாமையாளரை நீக்க கோரி ரயில் தொழிற்சங்கங்கள் போராட்டம்!Airbus கொள்வனவு சர்ச்சை – நாமல் மீது விசாரணை தொடர்கிறது!ஜே.ஆர். தொடங்கிய சமூக–பொருளாதார மாற்றத்தை தொடர கைகோர்ப்போம்” – ரணில்“பொதுப் பாதுகாப்புக்கு மக்கள் பங்கேற்பு அவசியம்” – நிலந்தி கொட்டாஹச்சிபல்கலைக்கழக அமைப்பின் பிரச்சினைகள் குறித்து தீர்வின்றி முடிந்த கலந்துரையாடல்!ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் – தீர்ப்பு 30ஆம் திகதி!இலங்கையை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி T20 தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து!சிறுவர் பராமரிப்பு நிலைய பிள்ளைகளுக்கு ரூ.20 இலட்சம் வீட்டு உதவி!பொது முகாமையாளரை நீக்க கோரி ரயில் தொழிற்சங்கங்கள் போராட்டம்!
விளையாட்டு

இலங்கையை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி T20 தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து!

September 18, 2026 · Tamil Ceylon LK

இங்கிலாந்து எதிர் இலங்கைக்கான இரண்டாவது இருபதுக்கு 20 (T20I) போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

கார்டிஃப் சோபியா கார்டன்ஸ் (Sophia Gardens) மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பபை தெரிவு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக பத்தும் நிசங்க 37 ஓட்டங்களும், சரித் அசலங்க 31 ஓட்டங்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் லியம் டவ்சன் அபாரமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து 146 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, 12.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 146 ஒட்டங்களை பெற்று எளிதில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணியில் அதிரடியாக விளையாடிய டொம் பென்டன் 52 ஓட்டங்களும், ஜோஸ் பட்லர் 30 ஓட்டங்களும் அணிக்கு சேர்த்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-0 எள்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›