LATEST
22வது திருத்தத்தால் அரசாங்கத்தில் சிறிய பிளவு – பிமல் ரத்நாயக்க22வது திருத்தத்திற்கு எதிராக கருப்பு உடையில் பாராளுமன்றம் வந்த SJB எம்.பிக்கள்!வங்கி, வாகனம், நிலப் பதிவு உள்ளிட்ட சேவைகளுக்கு TIN அவசியம்!முறைமை மேம்படுத்தல் காரணமாக வாகன வருமான வரி பத்திர சேவை தற்காலிக நிறுத்தம்இலங்கை வெற்றியால் தீர்மானப் போட்டியாக மாறிய இறுதி ஒருநாள் போட்டி!ட்ரம்பின் ஊடகத் தடைக்கு எதிராக CNN உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நீதிமன்ற நிவாரணம்!விவசாயிகளுக்காக மேலும் ரூ.1,800 மில்லியன் நட்டஈடு வழங்க திட்டம்!பலத்த மழையால் ஹட்டன், நுவரெலியா கல்வி வலய பாடசாலைகள் மூடல்22வது திருத்தத்தால் அரசாங்கத்தில் சிறிய பிளவு – பிமல் ரத்நாயக்க22வது திருத்தத்திற்கு எதிராக கருப்பு உடையில் பாராளுமன்றம் வந்த SJB எம்.பிக்கள்!வங்கி, வாகனம், நிலப் பதிவு உள்ளிட்ட சேவைகளுக்கு TIN அவசியம்!முறைமை மேம்படுத்தல் காரணமாக வாகன வருமான வரி பத்திர சேவை தற்காலிக நிறுத்தம்இலங்கை வெற்றியால் தீர்மானப் போட்டியாக மாறிய இறுதி ஒருநாள் போட்டி!ட்ரம்பின் ஊடகத் தடைக்கு எதிராக CNN உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நீதிமன்ற நிவாரணம்!விவசாயிகளுக்காக மேலும் ரூ.1,800 மில்லியன் நட்டஈடு வழங்க திட்டம்!பலத்த மழையால் ஹட்டன், நுவரெலியா கல்வி வலய பாடசாலைகள் மூடல்
உள்ளூர்

விவசாயிகளுக்காக மேலும் ரூ.1,800 மில்லியன் நட்டஈடு வழங்க திட்டம்!

September 25, 2026 · Tamil Ceylon LK

வறட்சி காரணமாகப் பயிர்ச் சேதங்களை எதிர்கொண்ட விவசாயிகளுக்கு நட்டஈட்டுத் தொகைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய, வறட்சியினால் பாதிக்கப்பட்ட 1,490 விவசாயிகளுக்குரிய முழுமையான நட்டஈட்டுத் தொகை தற்போது வழங்கப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கெனச் சொந்தமான 1,115 ஏக்கர் நிலப்பரப்பு சேதமடைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை ரூ. 57 மில்லியன் நட்டஈடாக விநியோகிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் மேலதிக நட்டஈடாக சுமார் ரூ. 1,800 மில்லியன் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

வறட்சி காரணமாகப் பயிர்கள் சேதமடைந்தமை தொடர்பில் 6,062 விவசாயிகள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். அத்துடன், விவசாயிகளுக்குச் சொந்தமான சுமார் 7,957 ஏக்கர் பயிர் நிலங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தச்சபை குறிப்பிட்டுள்ளது.

பயிர்ச் சேதங்களை விரைவாகவும் துல்லியமாகவும் மதிப்பீடு செய்து நட்டஈடுகளை வழங்கும் பணிகள் தற்போது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related Stories

மேலும் ›