LATEST
22வது திருத்தத்தால் அரசாங்கத்தில் சிறிய பிளவு – பிமல் ரத்நாயக்க22வது திருத்தத்திற்கு எதிராக கருப்பு உடையில் பாராளுமன்றம் வந்த SJB எம்.பிக்கள்!வங்கி, வாகனம், நிலப் பதிவு உள்ளிட்ட சேவைகளுக்கு TIN அவசியம்!முறைமை மேம்படுத்தல் காரணமாக வாகன வருமான வரி பத்திர சேவை தற்காலிக நிறுத்தம்இலங்கை வெற்றியால் தீர்மானப் போட்டியாக மாறிய இறுதி ஒருநாள் போட்டி!ட்ரம்பின் ஊடகத் தடைக்கு எதிராக CNN உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நீதிமன்ற நிவாரணம்!விவசாயிகளுக்காக மேலும் ரூ.1,800 மில்லியன் நட்டஈடு வழங்க திட்டம்!பலத்த மழையால் ஹட்டன், நுவரெலியா கல்வி வலய பாடசாலைகள் மூடல்22வது திருத்தத்தால் அரசாங்கத்தில் சிறிய பிளவு – பிமல் ரத்நாயக்க22வது திருத்தத்திற்கு எதிராக கருப்பு உடையில் பாராளுமன்றம் வந்த SJB எம்.பிக்கள்!வங்கி, வாகனம், நிலப் பதிவு உள்ளிட்ட சேவைகளுக்கு TIN அவசியம்!முறைமை மேம்படுத்தல் காரணமாக வாகன வருமான வரி பத்திர சேவை தற்காலிக நிறுத்தம்இலங்கை வெற்றியால் தீர்மானப் போட்டியாக மாறிய இறுதி ஒருநாள் போட்டி!ட்ரம்பின் ஊடகத் தடைக்கு எதிராக CNN உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நீதிமன்ற நிவாரணம்!விவசாயிகளுக்காக மேலும் ரூ.1,800 மில்லியன் நட்டஈடு வழங்க திட்டம்!பலத்த மழையால் ஹட்டன், நுவரெலியா கல்வி வலய பாடசாலைகள் மூடல்
உள்ளூர்

வங்கி, வாகனம், நிலப் பதிவு உள்ளிட்ட சேவைகளுக்கு TIN அவசியம்!

September 25, 2026 · Tamil Ceylon LK

எதிர்வரும் நவம்பர் 01 ஆம் திகதி முதல் பல்வேறு முக்கிய தேவைகளுக்காகச் செல்லுபடியாகும் வரி செலுத்துபவரின் அடையாள இலக்கச் சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டத்தின் கீழ் இந்த புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி,வங்கிக் கணக்குகளைத் தொடங்குதல், வாகன உரிமங்களைப் பதிவு செய்தல் அல்லது புதுப்பித்தல், நிலம் அல்லது வணிகங்களைப் பதிவு செய்தல், கட்டிடத் திட்ட அனுமதிகளைப் பெறுதல், பங்குகளைப் பரிமாற்றம் செய்தல் மற்றும் கடனட்டைகளுக்கு விண்ணப்பித்தல் ஆகியவற்றுக்குச் செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

2023 டிசம்பர் 31 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் 18 வயது பூர்த்தியடைந்த மற்றும் 2024 ஜனவரி 01 ஆம் திகதியன்று அல்லது அதற்குப் பின்னர் 18 வயதை அடைந்த அனைவரும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கச் சான்றிதழைப் பெறுவது கட்டாயமாகும்.

பதிவு செய்யாத நபர்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (eservices.ird.gov.lk) ஊடாகப் பதிவு செய்து வரி செலுத்துவோர் அடையாள இலக்கச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், இணைய வழியில் சரிபார்க்கப்பட்ட முடிவின் அச்சுப் பிரதியையும் உத்தியோகபூர்வ சான்றிதழுக்குப் பதிலாகப் பயன்படுத்த முடியும் எனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related Stories

மேலும் ›