LATEST
தலா ரூ.50 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் ரேணுக பெரேரா விடுவிப்பு.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் உலக இதய தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது!பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை வந்த அமெரிக்க பசிபிக் இராணுவத்தின் பிரதி கட்டளையிடும் ஜெனரல்!ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மூன்றாண்டுகளில் 100 திருட்டுச் சம்பவங்கள் அம்பலம்!ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்த விராட் கோலி!ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தள்ளுபடி.தலா ரூ.50 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் ரேணுக பெரேரா விடுவிப்பு.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் உலக இதய தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது!பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை வந்த அமெரிக்க பசிபிக் இராணுவத்தின் பிரதி கட்டளையிடும் ஜெனரல்!ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மூன்றாண்டுகளில் 100 திருட்டுச் சம்பவங்கள் அம்பலம்!ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்த விராட் கோலி!ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தள்ளுபடி.
உலகம்

ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

September 29, 2026 · Tamil Ceylon LK

ஈரானுக்கு எதிரான இராணுவ மற்றும் பொருளாதார மோதலில் அமெரிக்கா வெற்றி பெறும் என்றும், இதன் மூலம் உலகளாவிய கச்சா எண்ணெய் விலையை குறைய கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

விரைவில் ஈரான் சரணடையும், அந்நாடு சரணடைந்த உடன் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், ஈரான் சரணடைந்தவுடன் போர் விரைவில் முடிவுக்கு வரும். இதனால் கச்சா எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரிய போகிறது என்று கூறி உள்ளார். 

தனது நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவில் விலைவாசி குறைந்துள்ளது; மேலும் எரிபொருள் செலவுகள் குறைந்துள்ளன. அமெரிக்க நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வறுமை குறைவாக உள்ளது என்றார். 

போர்ச் சூழலுக்கு மத்தியிலும், கடந்த வார இறுதியில் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் இருந்து சாதனை அளவிலான கச்சா எண்ணெயை நாங்கள் வெளியே கொண்டு வந்தோம்; இது போருக்கு முந்தைய அளவை விட அதிகம் என்றும் அவர் மேலும் கூறினார். 

நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக ஈரான் மீது கூடுதல் இராணுவத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது என்று சூசகமாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார். 

ஈரான் பிரச்சனை தீர்ந்தவுடன், பெட்ரோல்-டீசல் விலைகள் மட்டுமல்லாமல் மளிகைப் பொருட்களின் விலைகளும் கணிசமாகக் குறையும் என்று டிரம்ப் கூறினார். 

ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறப்பதற்காக ஈரான் முன்வைத்த அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்கா நிராகரித்துள்ளதை டிரம்ப் உறுதிப்படுத்தினார். அந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு உட்படவில்லை என்றும், அதே நேரம் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.

Related Stories

மேலும் ›