LATEST
அதிக கட்டணம் வசூலித்த தனியார் வைத்தியசாலைக்கு நீதிமன்றம் எச்சரிக்கை மணி!வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு காற்று எச்சரிக்கைஅரசின் நடவடிக்கைக்கு எதிராக சட்டத்தரணிகள் இன்று கூடுகின்றனர்!அபிவிருத்தி முதலீட்டை அதிகரிக்கும் புதிய பொருளாதாரத் திட்டம்சாலை விபத்துகள் அதிகரிப்பு – 4 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழப்பு!யானை பிரச்சினைக்கு மூங்கில் உயிரி வேலி – அரசு திட்டம்!எசல பெரஹேராவில் போதைப்பொருளுடன் காவடி குழுவினர் கைது!தொடரை யார் கைப்பற்றப் போகிறார்கள்? இன்று இலங்கை–பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதல்!அதிக கட்டணம் வசூலித்த தனியார் வைத்தியசாலைக்கு நீதிமன்றம் எச்சரிக்கை மணி!வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு காற்று எச்சரிக்கைஅரசின் நடவடிக்கைக்கு எதிராக சட்டத்தரணிகள் இன்று கூடுகின்றனர்!அபிவிருத்தி முதலீட்டை அதிகரிக்கும் புதிய பொருளாதாரத் திட்டம்சாலை விபத்துகள் அதிகரிப்பு – 4 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழப்பு!யானை பிரச்சினைக்கு மூங்கில் உயிரி வேலி – அரசு திட்டம்!எசல பெரஹேராவில் போதைப்பொருளுடன் காவடி குழுவினர் கைது!தொடரை யார் கைப்பற்றப் போகிறார்கள்? இன்று இலங்கை–பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதல்!
உள்ளூர்

அபிவிருத்தி முதலீட்டை அதிகரிக்கும் புதிய பொருளாதாரத் திட்டம்

July 29, 2026 · Tamil Ceylon LK

தற்போது 9% என்ற அளவில் உள்ள மீண்டெழும் செலவீனங்களைக் குறைத்து, 4% ஆக உள்ள மூலதனச் செலவீனங்களை உயர்த்தும் நோக்கில் எதிர்வரும் ஆண்டிற்கான பொருளாதாரத் திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

2027 ஆம் ஆண்டில் மூலதனச் செலவீனமாக இரண்டு ட்ரில்லியன் ரூபாயை ஒதுக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது சுமார் 40% அதிகரிப்பாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

காலி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, நிறுவனங்களுக்கு இடையே முறையான ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தினால் சில திட்டங்கள் தாமதமடைந்துள்ளமை தொடர்பிலும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கவனம் இங்கு திரும்பியுள்ளது.

மேலும், சிறுவர் காப்பகங்கள்/தடுப்பு முகாம்களிலிருந்து வெளியேறும் சிறுவர்களின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வேலைத்திட்டத்தை விரைவுபடுத்தி, அதன் நன்மைகளை அவர்களுக்கு வழங்குவதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

மேலும் ›