LATEST
முன்னாள் IGP வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு!டீசல், மண்ணெண்ணெய் விலையில் மாற்றமில்லை!போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்படுகிறீர்களா?குழந்தைகளின் உணவுப் பழக்கத்தில் முக்கிய மாற்றம்!டெங்கு பரவல் தீவிரம்… கொசு ஒழிப்பை அதிகரிக்க அழைப்பு!Skills for Life – மாணவர்களுக்கான மாபெரும் கண்காட்சி!கோடிக்கணக்கான சொத்துகள்… மெர்வின் சில்வாவுக்கு புதிய சிக்கல்!வானிலை திணைக்களத்தின் அவசர எச்சரிக்கை!முன்னாள் IGP வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு!டீசல், மண்ணெண்ணெய் விலையில் மாற்றமில்லை!போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்படுகிறீர்களா?குழந்தைகளின் உணவுப் பழக்கத்தில் முக்கிய மாற்றம்!டெங்கு பரவல் தீவிரம்… கொசு ஒழிப்பை அதிகரிக்க அழைப்பு!Skills for Life – மாணவர்களுக்கான மாபெரும் கண்காட்சி!கோடிக்கணக்கான சொத்துகள்… மெர்வின் சில்வாவுக்கு புதிய சிக்கல்!வானிலை திணைக்களத்தின் அவசர எச்சரிக்கை!
உள்ளூர்

வானிலை திணைக்களத்தின் அவசர எச்சரிக்கை!

July 31, 2026 · Tamil Ceylon LK

இன்று (31) மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அநுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் இரத்தினபுரி, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Stories

மேலும் ›