LATEST
மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை – கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!உரிமம் முதல் தயாரிப்பு திகதி வரை சர்ச்சை – டின் மீன் நிறுவனம் சிக்கியது!நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.ரஷ்ய எண்ணெய் இறக்குமதி – இந்தியா, சீனாவுக்கு புதிய நெருக்கடி?உச்சம் தொட்ட தங்கம்… இன்று விலை சரிவு!உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவிப்பு!சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு புதிய நியமனங்கள்!எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு இல்லை – சபையில் திட்டவட்ட விளக்கம்!மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை – கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!உரிமம் முதல் தயாரிப்பு திகதி வரை சர்ச்சை – டின் மீன் நிறுவனம் சிக்கியது!நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.ரஷ்ய எண்ணெய் இறக்குமதி – இந்தியா, சீனாவுக்கு புதிய நெருக்கடி?உச்சம் தொட்ட தங்கம்… இன்று விலை சரிவு!உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவிப்பு!சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு புதிய நியமனங்கள்!எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு இல்லை – சபையில் திட்டவட்ட விளக்கம்!
உள்ளூர்

கொழும்பு செல்லும் பயணிகள் மாற்று வழி பயன்படுத்துங்கள்!

August 3, 2026 · Tamil Ceylon LK

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் பல இடங்களில் மண்மேடுகள் சரிந்து விழுந்தமையினால் அவ்வீதியூடான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

​ மண்மேடுகளும், பாறைகளும் வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளமையினால், ஹட்டனிலிருந்து கினிகத்தேனை, நாவலப்பிட்டி, கண்டி மற்றும் கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகனங்களுக்கும், அத்திசைகளிலிருந்து ஹட்டன் நோக்கி செல்லும் வாகனங்களுக்கும் போக்குவரத்துக்கு தடைகள் ஏற்பட்டுள்ளன. 

​ இதன்காரணமாக வீதியின் இருபுறமும் பெருமளவிலான வாகனங்கள் நீண்ட வரிசைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 

​ மண்மேடுகளை அகற்றி வீதியின் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவருவதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் பிரதேச மக்களும் இணைந்து செயற்படுகின்றனர். 

​ எவ்வாறாயினும், நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்திற் கொண்டு மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர். 

​ அதேநேரம் கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கடுகன்னாவை பகுதியிலும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

மேலும் ›