வளி மாசடைவால் இலங்கையில் வருடாந்தம் 7,000 மரணம்: சுகாதார அமைச்சு அதிர்ச்சி தகவல்!

சுவாசக் கோளாறுகள் மற்றும் மாரடைப்பு போன்ற ஆபத்தான சுகாதாரச் சிக்கல்களை ஏற்படுத்தும் வளி மாசடைவு காரணமாக, இலங்கையில் மாத்திரம் வருடாந்தம் சுமார் 7,000 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின் சுற்றாடல் மற்றும் தொழில்சார் சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் சாந்தனி விதான தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் குறிப்பிட்டார். உலகளவில் வளி மாசடைவால் 7 முதல் 8 மில்லியன் மரணங்கள் பதிவாவதாகவும், காற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் துகள்களால் ஆஸ்துமா, மூச்சுத்திணறல், இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், வெளிப்புறச் சூழலைக் காட்டிலும் வீட்டுக்குள்ளான வளி மாசடைவானது ஐந்து மடங்கு அதிகமாகக் காணப்படுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
Follow & Share




