LATEST
லக்கல புதிய நகர நீர் வழங்கல் திட்டம் இன்று மக்கள் பாவனைக்கு!22ஆவது திருத்தத்திற்கு மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு!கொலம்பியா பேரழிவு: இலங்கை ஆழ்ந்த கவலை!இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு முக்கிய பேச்சுவார்த்தை!யானைகளின் எதிர்காலம் நமது பொறுப்பு!அரிய சூரிய கிரகணத்திற்காக காத்திருக்கும் உலகம்!பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் மழைமீன்பிடி அமைச்சராக இருந்த காலத்து விவகாரம் ராஜித மீது வழக்கு!லக்கல புதிய நகர நீர் வழங்கல் திட்டம் இன்று மக்கள் பாவனைக்கு!22ஆவது திருத்தத்திற்கு மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு!கொலம்பியா பேரழிவு: இலங்கை ஆழ்ந்த கவலை!இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு முக்கிய பேச்சுவார்த்தை!யானைகளின் எதிர்காலம் நமது பொறுப்பு!அரிய சூரிய கிரகணத்திற்காக காத்திருக்கும் உலகம்!பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் மழைமீன்பிடி அமைச்சராக இருந்த காலத்து விவகாரம் ராஜித மீது வழக்கு!
உள்ளூர்

22ஆவது திருத்தத்திற்கு மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு!

August 12, 2026 · Tamil Ceylon LK

22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் முப்பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் தமது நிலைப்பாட்டைத் தெரிவித்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடிதத்தை, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பகிரங்கப்படுத்தினார். 

இந்தக் கடிதத்தின் மூலம் குறித்த அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டாம் என முப்பீட மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

இந்தக் கடிதத்தைக் தேடிக் கண்டுபிடிக்கக் கூட முடியாமல் இருந்தது. 

எப்படியோ இந்தக் கடிதம் எனக்குக் கிடைத்தது. நாடு எங்கு செல்கிறது என்பதை அவர்களே புரிந்து கொண்டுள்ளார்கள். 

தற்போதைய நிலையில், அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது முறையே 63 மற்றும் 65 ஆகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அந்த வயது எல்லையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் இவ்வாறு செயற்படுவது பொருத்தமானதல்ல என்பதே எமது நிலைப்பாடாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

மேலும் ›