LATEST
ஆறு மாதங்களில் பாரிய எரிபொருள் செலவு!நெல் கொள்வனவுக்கு பச்சைக்கொடி!சிறை அதிகாரிகளுக்கான இழப்பீடு வழங்கப்பட்டது!உணவுப் பொருட்களின் பணவீக்கம் அதிகரிப்பு!2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியானது!வாக்குமூலம் வழங்க வந்த நாமல் ராஜபக்ஷ!நந்தா மாலினிக்காக தேசிய துக்க தினங்கள்!பொலிஸ் நற்சான்றிதழ் சேவை தற்காலிகமாக முடக்கம்!ஆறு மாதங்களில் பாரிய எரிபொருள் செலவு!நெல் கொள்வனவுக்கு பச்சைக்கொடி!சிறை அதிகாரிகளுக்கான இழப்பீடு வழங்கப்பட்டது!உணவுப் பொருட்களின் பணவீக்கம் அதிகரிப்பு!2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியானது!வாக்குமூலம் வழங்க வந்த நாமல் ராஜபக்ஷ!நந்தா மாலினிக்காக தேசிய துக்க தினங்கள்!பொலிஸ் நற்சான்றிதழ் சேவை தற்காலிகமாக முடக்கம்!
Breaking

அதிகாலையில் நேர்ந்த விபத்து – ஐந்து உயிர்கள் பலி!

August 21, 2026 · Tamil Ceylon LK

மொனராகலை, கும்புக்கன பகுதியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற பாரிய வாகன விபத்தொன்றில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். 

வெல்லவாய – மொனராகலை வீதியின் கும்புக்கன, களு பாலத்தில் வெல்லவாய நோக்கிப் பயணித்த டிப்பர் வண்டியொன்று, அதற்கு எதிர்த்திசையில் வந்த உழவு இயந்திரத்துடன் மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த விபத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த 10 பேரில் எட்டுப் பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஐந்து பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

உயிரிழந்தவர்கள் 21, 26, 31, 55 மற்றும் 56 வயதுடைய தொடங்கஸ்லந்த, புத்தல மற்றும் ஹொரபொக்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

காயமடைந்த ஏனைய மூவரும் தற்சமயம் மொனராகலை வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வண்டியின் சாரதி மற்றும் உழவு இயந்திரத்தின் சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

மேலும் ›