LATEST
டெங்கு மீண்டும் தீவிரம் – மக்கள் அவதானம்!விலங்குகளை காக்க யாலா தற்காலிகமாக மூடல்!சவூதி எண்ணெய் குழாய் மூடல்; உலக சந்தையில் அதிர்ச்சி!மின்னல், பலத்த காற்று – மக்கள் அவதானம்!22ஆவது திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சியின் பெரும் நடவடிக்கை!வறட்சி தீவிரம் – குடிநீர் விநியோகம் தொடர்கிறது!இந்த ஆண்டில் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்!பயணிகள் கப்பல் விபத்து – மீட்புப் பணி தொடர்கிறது!டெங்கு மீண்டும் தீவிரம் – மக்கள் அவதானம்!விலங்குகளை காக்க யாலா தற்காலிகமாக மூடல்!சவூதி எண்ணெய் குழாய் மூடல்; உலக சந்தையில் அதிர்ச்சி!மின்னல், பலத்த காற்று – மக்கள் அவதானம்!22ஆவது திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சியின் பெரும் நடவடிக்கை!வறட்சி தீவிரம் – குடிநீர் விநியோகம் தொடர்கிறது!இந்த ஆண்டில் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்!பயணிகள் கப்பல் விபத்து – மீட்புப் பணி தொடர்கிறது!
உள்ளூர்

இந்த ஆண்டில் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்!

September 13, 2026 · Tamil Ceylon LK

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 இலட்சத்தைக் கடந்துள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைக்கு அமைய, ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டம்பர் 06 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,567,007 ஆகும்.

அதேவேளை, செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 31,885 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை கடந்துசென்ற காலத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 395,377 ஆகும்.

இதற்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 152,625 பேரும், சீனாவிலிருந்து 102,473 பேரும், ஜெர்மனியிலிருந்து 91,763 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

செப்டம்பர் மாதத்தின் முதல் 6 நாட்களில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அதன்படி இந்தியாவிலிருந்து 9,897 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

Related Stories

மேலும் ›