LATEST
இலங்கை தொழிலாளர்களுக்கு தாய்லாந்தில் புதிய வாய்ப்பு!காற்சட்டையில் மறைத்து கொண்டுவந்த குஷ்!வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய எச்சரிக்கை!பெரிம் தீவு ஹவுதிகள் கட்டுப்பாட்டில் – செங்கடலில் பதற்றம்!மாகாண சபைத் தேர்தலை உடனே நடத்துங்கள் – எதிர்க்கட்சி அழுத்தம்!2 மில்லியன் டாலர் லஞ்ச வழக்கு – நாமல் பிரதான சந்தேக நபரா?டெங்கு பாதிப்பு 97,000 கடந்தது – தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கை!மொரோக்கோவில் இறுதிப்போட்டி? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் இல்லை!இலங்கை தொழிலாளர்களுக்கு தாய்லாந்தில் புதிய வாய்ப்பு!காற்சட்டையில் மறைத்து கொண்டுவந்த குஷ்!வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய எச்சரிக்கை!பெரிம் தீவு ஹவுதிகள் கட்டுப்பாட்டில் – செங்கடலில் பதற்றம்!மாகாண சபைத் தேர்தலை உடனே நடத்துங்கள் – எதிர்க்கட்சி அழுத்தம்!2 மில்லியன் டாலர் லஞ்ச வழக்கு – நாமல் பிரதான சந்தேக நபரா?டெங்கு பாதிப்பு 97,000 கடந்தது – தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கை!மொரோக்கோவில் இறுதிப்போட்டி? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் இல்லை!
உள்ளூர்

இலங்கை தொழிலாளர்களுக்கு தாய்லாந்தில் புதிய வாய்ப்பு!

September 13, 2026 · Tamil Ceylon LK

தாய்லாந்து தொழில் அமைச்சரின் அழைப்பிற்கமைய, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் நாளை (14) முதல் 16 ஆம் திகதி வரை தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.


இந்த விஜயத்தின் போது தாய்லாந்தின் தொழில் அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் பதில் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.


இதன்போது பரஸ்பரம் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.


அத்துடன், தொழில் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தாய்லாந்தில் இலங்கைத் தொழிலாளர்களை வேலைவாய்ப்பில் அமர்த்துவது தொடர்பான உடன்படிக்கை என்பவற்றில் கையெழுத்திடுவதன் மூலம் இரு தரப்பினரும் தொழில் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவர்.


இந்தப் பயணம், சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு, இடம்பெயர்வு மற்றும் தொழிலாளர் இடப்பெயர்வு ஆகிய துறைகளில் நடைமுறை ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், மக்களுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கும், இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்கும் என்று கூறப்படுகிறது.

Related Stories

மேலும் ›