குருநாகல் மாவட்டத் தலைவராக ஜெயரத்ன ஹெரத் நியமனம்!

முன்னாள் அமைச்சர் ஜெயரத்ன ஹெரத், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குருநாகல் மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயரத்ன ஹெரத் அவர்கள், இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா அவர்களால், பொல்கஹவெல தேர்தல் தொகுதியின் பிரதம அமைப்பாளராகவும், குருநாகல் மாவட்டத்தின் மாவட்டத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசநாயக்க, தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் சமர சம்பத் தசநாயக்க, பொருளாளர் லசந்த அழகியவன்ன, கட்சியின் பிரதிச் செயலாளர் ஜகத் புஷ்பகுமார மற்றும் முன்னாள் மாகாண அமைச்சர் குருநாகல் தேர்தல் அமைப்பாளர் லட்சுமண் வேதருவ ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
Follow & Share




