LATEST
டெங்கு காரணமாக மூடப்பட்ட கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் ஜூலை 13ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்ப்பு.ஜனாதிபதி–எதிர்க்கட்சித் தலைவர் இடையே முக்கிய தொலைபேசி உரையாடல்!நெல் விலை வீழ்ச்சி: விவசாயிகளை காப்பதற்கான சிறப்புத் திட்டம் – SJB அறிவிப்பு!வவுனியா மேயர் சுந்தரலிங்கம் பூமிபனுக்கு நீதிமன்றத்தில் தற்காலிக வெற்றி!இயர்போன் அணிந்து வீதியில் நடப்பவர்களுக்கு இனி சிறை அல்லது அபராதம்? – பொலிஸார் அதிரடி முடிவு!நாட்டைக் கட்டியெழுப்ப 5 வருடங்கள் பொறுமையாகக் காத்திருங்கள்: பொலன்னறுவையில் பிரதி அமைச்சர் வேண்டுகோள்.லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் குறைப்பு!கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம்.டெங்கு காரணமாக மூடப்பட்ட கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் ஜூலை 13ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்ப்பு.ஜனாதிபதி–எதிர்க்கட்சித் தலைவர் இடையே முக்கிய தொலைபேசி உரையாடல்!நெல் விலை வீழ்ச்சி: விவசாயிகளை காப்பதற்கான சிறப்புத் திட்டம் – SJB அறிவிப்பு!வவுனியா மேயர் சுந்தரலிங்கம் பூமிபனுக்கு நீதிமன்றத்தில் தற்காலிக வெற்றி!இயர்போன் அணிந்து வீதியில் நடப்பவர்களுக்கு இனி சிறை அல்லது அபராதம்? – பொலிஸார் அதிரடி முடிவு!நாட்டைக் கட்டியெழுப்ப 5 வருடங்கள் பொறுமையாகக் காத்திருங்கள்: பொலன்னறுவையில் பிரதி அமைச்சர் வேண்டுகோள்.லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் குறைப்பு!கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம்.
உள்ளூர்

டெங்கு காரணமாக மூடப்பட்ட கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் ஜூலை 13ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்ப்பு.

July 4, 2026 · Tamil Ceylon LK

பல்கலைக்கழகங்களுக்குள் டெங்கு நோயாளர்கள் கொத்தணிகளாக (Cluster) அடையாளம் காணப்பட்டால், சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். 

டெங்கு நோயாளர்கள் பதிவானதன் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட கொழும்பிலுள்ள கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம், சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இது குறித்து பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

“தற்போது தேசிய மட்டத்தில் டெங்கு தொற்று நிலைமை காணப்படுவதாக சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர். அதேபோல், அதிக அவதானம் மிக்க பல மாவட்டங்களும் பிராந்தியங்களும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. 

கல்வி மற்றும் உயர் கல்வி நிறுவனங்களை இந்த டெங்கு தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

உயர் கல்வி நிறுவனங்களில் டெங்கு நோயாளர்கள் கொத்தணிகளாகப் பதிவானால், சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய அவற்றை மூட வேண்டியேற்படும். கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளமைக்கும் அதுவே காரணமாகும். 

அதேபோன்று, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் உரிய வழிகாட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. 

நாங்கள் கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழக அதிகாரிகளுடன் கலந்துரையாடினோம். அதற்கமைய, அதனை எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் திறப்பதற்கு எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்.

Related Stories

மேலும் ›