LATEST
இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று குறித்து வானிலை எச்சரிக்கை.தொடரும் மர்ம ம#ரணங்கள் குறித்து உண்மையை வெளிப்படுத்துங்கள்!” – மனோ கணேசன்டெங்கு அச்சம் தீவிரம்! நோயாளிகள் 76,044 ஆக உயர்வுஇரண்டாவது முறையாக கோல்டன் பூட் வென்ற எம்பாப்பே!மெஸ்ஸியின் கனவை தகர்த்த ஸ்பெயின்! உலகக் கோப்பை கைப்பற்றியது“NPP-யை தோற்கடிக்க தெய்வீக சக்தி வேண்டும்!” – அருணா ஜெயசேகரஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்: அமெரிக்க வீரர் பலி மற்றும் ஒருவர் காயம்!நாட்டின் பல பகுதிகளுக்கு மழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று குறித்து வானிலை எச்சரிக்கை.தொடரும் மர்ம ம#ரணங்கள் குறித்து உண்மையை வெளிப்படுத்துங்கள்!” – மனோ கணேசன்டெங்கு அச்சம் தீவிரம்! நோயாளிகள் 76,044 ஆக உயர்வுஇரண்டாவது முறையாக கோல்டன் பூட் வென்ற எம்பாப்பே!மெஸ்ஸியின் கனவை தகர்த்த ஸ்பெயின்! உலகக் கோப்பை கைப்பற்றியது“NPP-யை தோற்கடிக்க தெய்வீக சக்தி வேண்டும்!” – அருணா ஜெயசேகரஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்: அமெரிக்க வீரர் பலி மற்றும் ஒருவர் காயம்!நாட்டின் பல பகுதிகளுக்கு மழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!
உள்ளூர்

கம்பஹா, கொழும்பில் டெங்கு அபாயம் தீவிரம்!

July 19, 2026 · Tamil Ceylon LK

இவ்வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 75,321 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நேற்று (18) மாத்திரம் 843 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

ஜூலை மாதத்தின் கடந்த 18 நாட்களில் மாத்திரம் 19,943 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் அதிகளவிலான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர் என்பதுடன், அந்த எண்ணிக்கை 39,667 ஆகும்.

இதற்கு மேலதிகமாக, தென் மாகாணத்தில் 11,610 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 6,325 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 6,305 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

ஜூலை மாதத்தில் கம்பஹா மாவட்டத்தில் 15,762 நோயாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 15,000 நோயாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 5,280 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

டெங்கு தொற்று காரணமாக இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Stories

மேலும் ›