இன்று பல மாவட்டங்களில் 50 மி.மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி!

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (30) 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் வடமேல் மாகாணம் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதுடன், ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.
வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்கள் உட்பட திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மணிக்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மேலும், சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் மழை பெய்யக்கூடும் என்பதுடன், ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான மற்றும் கற்பிட்டி தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் எனவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.




