ஓய்வூ வயது நீடிப்புத் தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக வஜிரா அபேவர்தன கண்டனம்!

நாட்டில் நிலவும் சவாலான சூழ்நிலையில் பொதுச்சேவை மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் அரசாங்கத்தின் முடிவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிரா அபேவர்தன கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்குகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். கடந்த கால கலவரங்களை நினைவுபடுத்திய அவர், ஓய்வுக் கால நீடிப்புத் தொடர்பில் ஆட்சியாளர்கள் இளைஞர் அதிருப்தி ஆணைக்குழுவின் அறிக்கையை மீள வாசிக்க வேண்டும் என எச்சரித்தார். அரசாங்கத்தின் இத்தகைய அறியாமையான செயற்பாடுகள் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும், இப்பிரச்சினை குறித்து மக்கள் நீதிமன்றத்திற்குச் செல்லத் தயாராக வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
Follow & Share




