LATEST
கொழும்பு செல்லும் பயணிகள் மாற்று வழி பயன்படுத்துங்கள்!நாளை பள்ளிக்குச் செல்ல வேண்டாம்! முக்கிய அறிவிப்புபேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!27% சரிவு! இலங்கை வாகன சந்தையில் என்ன நடக்கிறது?கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி மக்களே அவதானம்!ஈரான் பேச்சுவார்த்தை எதிரொலி! கச்சா எண்ணெய் விலை சரிந்ததுஇலங்கையில் வானிலை மோசமடைகிறது! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை20 கைதிகள் பூசா சிறைக்கு – சிறைச்சாலைகள் திணைக்களத்தின் நடவடிக்கை!கொழும்பு செல்லும் பயணிகள் மாற்று வழி பயன்படுத்துங்கள்!நாளை பள்ளிக்குச் செல்ல வேண்டாம்! முக்கிய அறிவிப்புபேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!27% சரிவு! இலங்கை வாகன சந்தையில் என்ன நடக்கிறது?கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி மக்களே அவதானம்!ஈரான் பேச்சுவார்த்தை எதிரொலி! கச்சா எண்ணெய் விலை சரிந்ததுஇலங்கையில் வானிலை மோசமடைகிறது! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை20 கைதிகள் பூசா சிறைக்கு – சிறைச்சாலைகள் திணைக்களத்தின் நடவடிக்கை!
உள்ளூர்

பேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!

August 3, 2026 · Tamil Ceylon LK

நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்திற்கொண்டு, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கல்வி நடவடிக்கைகளும் பரீட்சைகளும் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது. 

​எவ்வாறாயினும், பல்கலைக்கழகத்தின் அத்தியாவசிய சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

​அதற்கமைய, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன: 

​ தமது சொந்தப் பிரதேசங்களுக்குப் பாதுகாப்பாகப் பயணிக்கக்கூடிய மாணவர்கள் அவ்வாறு புறப்பட்டுச் செல்ல முடியும். 

சீரற்ற வானிலை காரணமாக வீடுகளுக்குச் செல்ல முடியாத மாணவர்கள், ‘சரஸவி மெதுர’ விடுதியைத் தவிர்த்து, பல்கலைக்கழக விடுதி நிர்வாகத்திற்கு அறிவித்துத் தங்கியிருக்க முடியும். 

​அபாயகரமான தனியார் தங்கும் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் பாதுகாப்புக்காகப் பல்கலைக்கழக விடுதிகளுக்கு வருகை தந்தால், அவர்களை ஏற்றுக்கொண்டு தேவையான பதிவுகளைப் பேணுமாறு விடுதி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

​எந்தவொரு மாணவரும் விடுதிகளை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தப்பட மாட்டார்கள் என்றும் பல்கலைக்கழகம் வலியுறுத்துகிறது. 

​தற்போதைய நிலைமை வழமைக்கு திரும்பும் வரை பல்கலைக்கழக சமூகத்தினர் தமது பாதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல்களைப் பின்பற்றிச் செயற்படுமாறு பேராதனைப் பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories

மேலும் ›