LATEST
இங்கிலாந்து அணியில் நட்சத்திர வீரர்கள் இணைப்பு!நேபாள வெள்ளப்பெருக்கு; சுரங்க மீட்பு பணிகள் தீவிரம்!இன்று நள்ளிரவு முதல் புதிய எரிவாயு விலை!பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் பலத்த மழை – மக்களுக்கு எச்சரிக்கை!சில மணிநேர விசாரணைக்குப் பின் நாமல் கைது!9 நாட்கள் கழித்து சுரங்கத்தில் இருந்து இருவர் உயிருடன் மீட்பு!இங்கிலாந்து T20 தொடரில் குசல் மெண்டிஸ், பிநுர இல்லை!டெங்கு மரணங்கள் 72 ஆக உயர்வு!இங்கிலாந்து அணியில் நட்சத்திர வீரர்கள் இணைப்பு!நேபாள வெள்ளப்பெருக்கு; சுரங்க மீட்பு பணிகள் தீவிரம்!இன்று நள்ளிரவு முதல் புதிய எரிவாயு விலை!பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் பலத்த மழை – மக்களுக்கு எச்சரிக்கை!சில மணிநேர விசாரணைக்குப் பின் நாமல் கைது!9 நாட்கள் கழித்து சுரங்கத்தில் இருந்து இருவர் உயிருடன் மீட்பு!இங்கிலாந்து T20 தொடரில் குசல் மெண்டிஸ், பிநுர இல்லை!டெங்கு மரணங்கள் 72 ஆக உயர்வு!
உள்ளூர்

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம்!

September 4, 2026 · Tamil Ceylon LK

வறட்சியான காலநிலை காரணமாக பல மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கான இழப்பீடு இன்று (04) முதல் வழங்கப்படும் என விவசாய மற்றும் கமநல காப்பீட்டு சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய, பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இழப்பீடு தொகை இன்று வரவு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் இழப்பீடு தொகை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வறண்ட காலநிலை காரணமாக ஹம்பாந்தோட்டை, அம்பாறை, புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சுமார் 3,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்பீட்டு சபை குறிப்பிட்டுள்ளது.

Related Stories

மேலும் ›