LATEST
ஷிரான் பாசிக் தொடர்பான நிதி விசாரணையில் தந்தை கைது!அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை!கொங்கோவின் புகாவு நகரை உலுக்கிய தீ விபத்து!நாமல் விவகாரம் குறித்து சர்வதேச அமைப்பை நாடிய மிலிந்த!2027 முதல் அனைத்து சிம் பயனாளர்களுக்கும் முழு அடையாளச் சரிபார்ப்பு!பொதுப் போக்குவரத்தில் மக்களின் நம்பிக்கையை உயர்த்த அரசு திட்டம்!தனியார் வாகனப் பயன்பாட்டை குறைக்க புதிய மெட்ரோ பேருந்து திட்டம்!மிக் ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க FCID சென்ற கோட்டாபய!ஷிரான் பாசிக் தொடர்பான நிதி விசாரணையில் தந்தை கைது!அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை!கொங்கோவின் புகாவு நகரை உலுக்கிய தீ விபத்து!நாமல் விவகாரம் குறித்து சர்வதேச அமைப்பை நாடிய மிலிந்த!2027 முதல் அனைத்து சிம் பயனாளர்களுக்கும் முழு அடையாளச் சரிபார்ப்பு!பொதுப் போக்குவரத்தில் மக்களின் நம்பிக்கையை உயர்த்த அரசு திட்டம்!தனியார் வாகனப் பயன்பாட்டை குறைக்க புதிய மெட்ரோ பேருந்து திட்டம்!மிக் ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க FCID சென்ற கோட்டாபய!
விளையாட்டு

20 மில்லியன் டொலர் வருவாயை இழக்கும் இலங்கை கிரிக்கெட்!

September 10, 2026 · Tamil Ceylon LK

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள முதலாவது ஐ.சி.சி. மகளிர் செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்தும் உரிமையை இலங்கை இழந்ததன் மூலம், சுமார் 20 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் இழப்பை எதிர்கொண்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த இந்தத் தொடர், தற்போது இந்தியாவுக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 2027ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை மும்பை மற்றும் வதோதரா ஆகிய நகரங்களில் இந்தத் தொடர் நடைபெறவுள்ளது.

அரசாங்கத்தின் தலையீடு மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் (SLC) தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் இல்லாத காரணத்தினால், 6 நாடுகள் பங்கேற்கும் தொடரை இந்தியாவுக்கு மாற்றுவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) கடந்த வாரம் அறிவித்திருந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் ஷம்மி சில்வா தலைமையிலான நிர்வாகம் பதவி விலகியதை அடுத்து, விளையாட்டுத்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட மறுசீரமைப்புக் குழுவே தற்போது நிர்வாகத்தை முன்னெடுத்து வருகின்றது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிகளுக்கு முரணான முறையில் நிர்வாக மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமையே இந்த உரிமையை இழக்கக் காரணம் என சர்வதேச கிரிக்கெட் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

2024ஆம் ஆண்டுக்கு பின்னர் அரசாங்கத் தலையீடு காரணமாக இலங்கை இழந்துள்ள இரண்டாவது சர்வதேச கிரிக்கெட் தொடர் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›