இலஞ்ச ஆணைக்குழு தொடர்ந்த வழக்கு – அடுத்த கட்ட விசாரணைக்கு உத்தரவு!

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகோடா மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று (17) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிணையில் விடுவிக்கப்பட்ட பிரதிவாதிகளான வசந்த கரன்னகோடா மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். முன்வைக்கப்பட்ட உண்மைகளைப் பரிசீலித்த நீதிமன்றம், இவ்வழக்கை விசாரணைக்கு முந்தைய கலந்தாய்விற்காக அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
முறையான தகுதிகள் இல்லாதபோதிலும், பிரதிவாதி யோஷித ராஜபக்சவை பிரிட்டனில் உள்ள ராயல் கடற்படைப் பயிற்சிக் கல்லூரிக்குப் பயிற்சிக்கு அனுப்பியதன் மூலம் ஊழல் குற்றத்தைச் செய்ததாகக் குற்றம் சாட்டி, இலஞ்ச ஆணைக்குழு பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.




