LATEST
முக்கிய மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை உபகரண பற்றாக்குறை!வாகன விலைகள் கணிசமாக குறைந்தன – இறக்குமதியாளர்கள் சங்கம்!ICC மாத வீரர் விருதில் இலங்கைக்கு பெருமை சேர்த்த சொனால் தினூஷ!அவுஸ்திரேலியா செல்லும் மாணவர்களே கவனம் – புதிய விதிகள் வரலாம்!சட்ட நடைமுறைக்கு புறம்பாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு!இலஞ்ச ஆணைக்குழு தொடர்ந்த வழக்கு – அடுத்த கட்ட விசாரணைக்கு உத்தரவு!நீதிபதிகளின் சம்பளத்திலும் APIT வரி – உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!கோட்டை நீதவான் நீதிமன்ற ஊழியர் இலஞ்ச வழக்கில் கைது!முக்கிய மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை உபகரண பற்றாக்குறை!வாகன விலைகள் கணிசமாக குறைந்தன – இறக்குமதியாளர்கள் சங்கம்!ICC மாத வீரர் விருதில் இலங்கைக்கு பெருமை சேர்த்த சொனால் தினூஷ!அவுஸ்திரேலியா செல்லும் மாணவர்களே கவனம் – புதிய விதிகள் வரலாம்!சட்ட நடைமுறைக்கு புறம்பாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு!இலஞ்ச ஆணைக்குழு தொடர்ந்த வழக்கு – அடுத்த கட்ட விசாரணைக்கு உத்தரவு!நீதிபதிகளின் சம்பளத்திலும் APIT வரி – உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!கோட்டை நீதவான் நீதிமன்ற ஊழியர் இலஞ்ச வழக்கில் கைது!
உள்ளூர்

சட்ட நடைமுறைக்கு புறம்பாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு!

September 17, 2026 · Tamil Ceylon LK

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது 

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

பேருந்துகளுக்கு சட்டவிரோதமான முறையில் வீதி அனுமதிப்பத்திரங்களை வழங்கிய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தின் விதிகளுக்கும், 2014.09.19 ஆம் திகதி அமைச்சரவைத் தீர்மானத்தின் பரிந்துரைகளுக்கும் முரணாக, தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்காக 56 பயணிகள் சேவை அனுமதிப்பத்திரங்களை சட்டபூர்வ நடைமுறைகளுக்கு அப்பால், வருடாந்தக் கட்டணங்களை ஒரே தடவையில் அறவிடாமல் வழங்கியமையே முன்னாள் தலைவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும். 

இதற்கமைய, சந்தேகநபர் இன்று (17) முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related Stories

மேலும் ›