LATEST
அதிகரிக்கும் டெங்கு நோயாளர் எண்ணிக்கை!யோஷித ராஜபக்ஷ மீதான வழக்கு: பூர்வாங்க விசாரணை மாநாட்டிற்காக திகதியிடப்பட்டது!கட்டார் விஜயத்தை முடித்துக்கொண்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடு திரும்பினார்.துணை மேயராகத் தேர்வான அரசு அதிகாரிகளுக்கு புதிய விடுப்பு சலுகை!பட்டயப் பத்திரிகையாளர் மசோதாவை உடனே திரும்பப் பெறுங்கள்!தெற்காசியாவின் நீளமான நீர்ப்பாசன சுரங்கம் பொதுமக்களுக்கு திறப்பு!பெரும் நிதி மோசடி வழக்கில் முன்னாள் உறுப்பினர் கைதுமத்திய கிழக்கு போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் விமானங்கள் 70 நிமிடங்கள் வானில் வட்டமிட்டன!அதிகரிக்கும் டெங்கு நோயாளர் எண்ணிக்கை!யோஷித ராஜபக்ஷ மீதான வழக்கு: பூர்வாங்க விசாரணை மாநாட்டிற்காக திகதியிடப்பட்டது!கட்டார் விஜயத்தை முடித்துக்கொண்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடு திரும்பினார்.துணை மேயராகத் தேர்வான அரசு அதிகாரிகளுக்கு புதிய விடுப்பு சலுகை!பட்டயப் பத்திரிகையாளர் மசோதாவை உடனே திரும்பப் பெறுங்கள்!தெற்காசியாவின் நீளமான நீர்ப்பாசன சுரங்கம் பொதுமக்களுக்கு திறப்பு!பெரும் நிதி மோசடி வழக்கில் முன்னாள் உறுப்பினர் கைதுமத்திய கிழக்கு போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் விமானங்கள் 70 நிமிடங்கள் வானில் வட்டமிட்டன!
உள்ளூர்

கட்டார் விஜயத்தை முடித்துக்கொண்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடு திரும்பினார்.

July 16, 2026 · Tamil Ceylon LK

கட்டார் நாட்டின் முன்னாள் அமீரின் மறைவுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதற்காக, அந்நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று (16) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது, கட்டாரின் தோஹாவில் உள்ள லுஸைல் (Lusail) அரண்மனைக்குச் சென்ற பிரதமர், தற்போதைய அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானியைச் சந்தித்து தனது அனுதாபங்களைப் பகிர்ந்துகொண்டார்.

தொடர்ந்து அல் வஜ்பா (Al Wajbah) அரண்மனைக்குச் சென்ற பிரதமர், கட்டார் அமீரின் தாயார் ஷேய்க்கா மோசா பின்ட் நாசரிடம் இலங்கை அரசாங்கத்தின் இரங்கலைத் தெரிவித்தார். அத்துடன், மறைந்த முன்னாள் அமீரின் புதல்விகள் மற்றும் அரச குடும்ப உறுப்பினர்களிடமும் தனது ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்தார்.

இந்நிகழ்வில் கட்டார் நாட்டின் சமூக மேம்பாடு மற்றும் குடும்ப விவகாரங்கள் அமைச்சர் புதைனா பின்ட் அலி அல் ஜபர் அல் நுஜைமியும் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›