LATEST
விஜயதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல்கைது மற்றும் தடுப்புக்காவலுக்கு எதிராக சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு – நீதிமன்ற உத்தரவுமுன்னாள் காவல்துறைத் தலைவர் மரணம் – இரண்டு சிறப்பு பொலிஸ் குழுக்கள் நியமனம்பொலிஸ் துறையில் முக்கிய நியமனம்! வருண ஜயசுந்தருக்கு புதிய பதவி!மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூடு – இளைஞர் உயிரிழந்தார்34 ஆண்டுகளுக்கும் மேலான பொலிஸ் சேவை… சி.டி. விக்ரமரத்ன காலமானார்கடலுக்குச் செல்லும் மீனவர்கள் அவதானம்! கடல் சீற்றம் அதிகரிக்கும்பிரான்சில் புதிய சட்டம்!விஜயதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல்கைது மற்றும் தடுப்புக்காவலுக்கு எதிராக சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு – நீதிமன்ற உத்தரவுமுன்னாள் காவல்துறைத் தலைவர் மரணம் – இரண்டு சிறப்பு பொலிஸ் குழுக்கள் நியமனம்பொலிஸ் துறையில் முக்கிய நியமனம்! வருண ஜயசுந்தருக்கு புதிய பதவி!மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூடு – இளைஞர் உயிரிழந்தார்34 ஆண்டுகளுக்கும் மேலான பொலிஸ் சேவை… சி.டி. விக்ரமரத்ன காலமானார்கடலுக்குச் செல்லும் மீனவர்கள் அவதானம்! கடல் சீற்றம் அதிகரிக்கும்பிரான்சில் புதிய சட்டம்!
உள்ளூர்

34 ஆண்டுகளுக்கும் மேலான பொலிஸ் சேவை… சி.டி. விக்ரமரத்ன காலமானார்

July 17, 2026 · Tamil Ceylon LK

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார்

துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் அவர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தமக்கு தாமே துப்பாக்கிச் சூட்டை ஏற்படுத்தி தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

1986ம் ஆண்டு உதவி பயிற்சி பொலிஸ் அத்தியட்சகராக, பொலிஸ் சேவையில் இணைந்துகொண்ட சி.டி.விக்ரமரத்ன், 34 வருடங்களுக்கும் அதிக காலம் பொலிஸ் சேவையில் ஈடுபட்டிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தையடுத்து, பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பட்ட நிலையில் பதில் பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டார்.

அதன்பின்னர் ஒரு வருடமும் 7 மாதங்களும் குறித்த பதவியை வகித்து வந்ததுடன் பின்னர் 35 வது பொலிஸ் மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.

இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதியுடன் அவர் தமது கடமைகளில் இருந்து உத்தியோகப்பூர்வமாக ஓய்வுப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது .

Related Stories

மேலும் ›