பிரான்சில் புதிய சட்டம்!

பிரான்சில் குணப்படுத்த முடியாத நோயினால் அவதிப்படும் முதியவர்கள் மற்றும் மரணப் படுக்கையில் இருப்பவர்கள் சட்டப்பூர்வமாகத் தற்கொலை செய்துகொள்வதை அனுமதிக்கும் மசோதாவிற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பல ஆண்டுகால அரசியல் மற்றும் சமூக விவாதங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதாவிற்கு ஆதரவாக 291 வாக்குகளும், எதிராக 241 வாக்குகளும் பதிவாகியுள்ளன.
இந்தச் சட்டத்தின் கீழ், சிகிச்சையால் தணிக்க முடியாத கடுமையான உடல் அல்லது மன வேதனையை அனுபவிக்கும் நோயாளிகள், மருத்துவரிடம் அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.அந்த விண்ணப்பத்தின் மீது மருத்துவர் 15 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். இருப்பினும், இந்த மசோதா இறுதிச் சட்டமாவதற்கு முன்னதாக, அதன் விதிகள் பிரெஞ்சு அரசியலமைப்பிற்கு இணக்கமாக உள்ளதா என்பதை ஆராய அரசியலமைப்பு மன்றத்திற்கு அனுப்பப்படவுள்ளது. செனட் சபையில் பலமுறை நிராகரிக்கப்பட்ட இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது, அந்நாட்டின் மருத்துவ மற்றும் சட்ட வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.




