LATEST
சுற்றுலா வளர்ச்சியில் இலங்கை உலகளவில் முன்னேற்றம் பதிவு.மின் கட்டணம் எப்போது குறையும்? அமைச்சர் அநுர கருணாதிலக விளக்கம்5 பாதுகாப்பு மையங்களில் 124 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கொழும்பில் Bus Lane திட்டம் தீவிரம்!கடல்சார் பாதுகாப்பு சேவையில் எவன்கார்ட் இணைக்கப்பட்டமை குறித்து முறைப்பாடு செய்ய கோப் குழு நடவடிக்கை.பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்.கடலோர மக்கள் மற்றும் மீனவர்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்.பட்லருக்கு பதிலாக டேன் லோரன்ஸ் இங்கிலாந்து அணியில் சேர்ப்பு.சுற்றுலா வளர்ச்சியில் இலங்கை உலகளவில் முன்னேற்றம் பதிவு.மின் கட்டணம் எப்போது குறையும்? அமைச்சர் அநுர கருணாதிலக விளக்கம்5 பாதுகாப்பு மையங்களில் 124 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கொழும்பில் Bus Lane திட்டம் தீவிரம்!கடல்சார் பாதுகாப்பு சேவையில் எவன்கார்ட் இணைக்கப்பட்டமை குறித்து முறைப்பாடு செய்ய கோப் குழு நடவடிக்கை.பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்.கடலோர மக்கள் மற்றும் மீனவர்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்.பட்லருக்கு பதிலாக டேன் லோரன்ஸ் இங்கிலாந்து அணியில் சேர்ப்பு.
உள்ளூர்

மின்னல் மற்றும் பலத்த காற்று குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை.

September 26, 2026 · Tamil Ceylon LK

நாட்டின் பல இடங்களில் இன்றும் (26) பல இடங்களில் மழையுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். 

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். 

இதேவேளை சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும் என்பதுடன், காற்றின் வேகமானது மணிக்கு 30-40 கி.மீ. வரை காணப்படும். 

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும். 

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். 

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் சுமார் 2.0 – 2.5 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுகிறது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் அக் கடற்பரப்புகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அவ்வேளைகளில் அக்கடற்பரப்புகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related Stories

மேலும் ›