LATEST
சுற்றுலா வளர்ச்சியில் இலங்கை உலகளவில் முன்னேற்றம் பதிவு.மின் கட்டணம் எப்போது குறையும்? அமைச்சர் அநுர கருணாதிலக விளக்கம்5 பாதுகாப்பு மையங்களில் 124 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கொழும்பில் Bus Lane திட்டம் தீவிரம்!கடல்சார் பாதுகாப்பு சேவையில் எவன்கார்ட் இணைக்கப்பட்டமை குறித்து முறைப்பாடு செய்ய கோப் குழு நடவடிக்கை.பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்.கடலோர மக்கள் மற்றும் மீனவர்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்.பட்லருக்கு பதிலாக டேன் லோரன்ஸ் இங்கிலாந்து அணியில் சேர்ப்பு.சுற்றுலா வளர்ச்சியில் இலங்கை உலகளவில் முன்னேற்றம் பதிவு.மின் கட்டணம் எப்போது குறையும்? அமைச்சர் அநுர கருணாதிலக விளக்கம்5 பாதுகாப்பு மையங்களில் 124 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கொழும்பில் Bus Lane திட்டம் தீவிரம்!கடல்சார் பாதுகாப்பு சேவையில் எவன்கார்ட் இணைக்கப்பட்டமை குறித்து முறைப்பாடு செய்ய கோப் குழு நடவடிக்கை.பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்.கடலோர மக்கள் மற்றும் மீனவர்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்.பட்லருக்கு பதிலாக டேன் லோரன்ஸ் இங்கிலாந்து அணியில் சேர்ப்பு.
தொழில்நுட்பம்

செப்.1 முதல் ஆப்பிள் நிறுவன புதிய சி.இ.ஓ-ஆக ஜான் டெர்னஸ் பொறுப்பேற்பு

April 21, 2026 · Tamil Ceylon LK

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்-க்கு பிறகு இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்ட நிலையில், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு டிம் குக் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

65 வயதான குக், செப்டம்பர் 01-ஆம் திகதியன்று தலைமை செயல் அதிகாரி பொறுப்புகளை ஆப்பிள் நிறுவனத்தின் வன்பொருள் பொறியியல் தலைவரான ஜான் டெர்னஸிடம் ஒப்படைக்க உள்ளதாகவும், அதே சமயம், கலிபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள அந்த நிறுவனத்தில் நிர்வாகத் தலைவராகத் தொடர்ந்து பணியாற்றுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருப்பதும், இத்தகைய ஒரு அசாதாரணமான நிறுவனத்தை வழிநடத்த நம்பப்பட்டதும் என் வாழ்வின் மிகப்பெரிய பாக்கியமாகும்நான் என் முழு உள்ளத்தாலும் ஆப்பிளை நேசிக்கிறேன்.

இவ்வளவு புத்திசாலித்தனமான, புதுமையான, படைப்பாற்றல் மிக்க மற்றும் ஆழ்ந்த அக்கறை கொண்ட ஒரு குழுவுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்,” என்று குக் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார் .

இந்நிலையில், செப்.1ல் இருந்து வன்பொருள் பொறியியல் தலைவரான ஜான் டெர்னஸ் பொறுப்பேற்பார் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

Related Stories

மேலும் ›